Home
Mobile

காசு கொட்டி வாங்கிருக்கோம்.. கதறும் Samsung கஸ்டமர்ஸ்.. இந்த 3 போன்களிலும் டிஸ்பிளே சிக்கல்.. பெருகும் புகார்!

அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, எங்கு பார்த்தாலும்.. யாரை பார்த்தாலும்.. சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் புகழைத்தான் பாடுகிறார்கள். ஆனால் தற்போது சாம்சங்கின் இந்த லேட்டஸ்ட் பிளாக்ஷிப் போன்கள் ஆனது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது போல் தெரிகிறது.

கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன்களை வாங்கிய பயனர்கள் தங்கள் போன்களில் க்ரெய்னி சிக்கலை (Grainy Problem) எதிர்கொள்வதாக புகார் அளித்துள்ளனர். அதாவது பயனர்கள் ஒரு ஆப்பையோ அல்லது டார்க் பேக் கிரவுண்ட் உடனான ஏதேனும் ஒன்றையோ ஸ்மார்ட்போனில் பார்க்கும்போது தான் பெரும்பாலும் இந்த க்ரெய்னி சிக்கல் ஏற்படுகிறது.

இந்த 3 Samsung போன்களிலும் டிஸ்பிளே சிக்கல்.. பெருகும் புகார்!

இந்த சிக்கலின் போது கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் பயனர்கள் க்ரெய்னி ஸ்க்ரீனை கவனிக்க தொடங்குகிறார்கள். இந்த சிக்கல் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் முழுவதும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி எஸ்24 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஆகிய மூன்று மாடல்களிலுமே க்ரெய்னி சிக்கலை எதிர்கொள்வதாக பயனர்கள் புகாரளித்த வண்ணம் உள்ளனர்.

கேலக்ஸி எஸ்24 சீரீஸில் ஏற்படும் க்ரெய்னி சிக்கல் தொடர்பாக சாம்சங் என்ன கூறுகிறது? கேலக்ஸி எஸ்24 சீரீஸ் பயனர்களின் புகார்களுக்கு பதிலளித்த சாம்சங், கேலக்ஸி எஸ்24 சீரிஸின் விவிட் டிஸ்ப்ளே மோட் ஆனது திட்டமிட்டபடி செயல்படுகிறது. இருப்பினும் இந்த சிக்கலை சரிசெய்வதற்கான செட்டிங்ஸ் அப்டேட் ஆனது வெளியிடப்படும் என்பதையும் சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நினைவூட்டும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது கடந்த ஜனவரி மாதம் உலகளவில் அறிமுகமாகின. மூன்று மாடல்களுமே கேலக்ஸி ஏஐ (Galaxy AI) அம்சங்களுடன் அறிமுகமாகின. அதில் லைவ் டிரான்ஸ்லேட், நோட் அசிஸ்டென்ட் மற்றும் சர்க்கிள் டூ சேர்ச் போன்ற அம்சங்களும் அடக்கம்.

இந்த சீரிஸில் ஏற்கனவே சில குறைகளை பயனர்கள் பட்டியலிட்டு உள்ளனர். குறிப்பாக எஸ்24 பிளஸ் மாடலில்! இது பெரிய அளவிலான கேமரா மேம்படுத்தல்களை பெறவில்லை; இது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் மட்டுமே வருகிறது; கடைசியாக பழைய மாடலுடன் (அதாவது எஸ்23 பிளஸ் மாடலுடன்) ஒப்பிடும் போது சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான வடிவமைப்பு மாற்றங்களும் எதுவும் இல்லை.

விலையை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ரூ.1.29,999 க்கும், கேலக்ஸி எஸ்24 பிளஸ் ரூ.99,999 க்கும், கேலக்ஸி எஸ்24 ரூ.79,999 க்கும் வாங்க கிடைக்கும். இம்மூன்று மாடல்களின் முக்கிய போட்டியாளர் ஆன ஐபோன் 15 சீரிஸின் ஐபோன் 15 மாடல் ரூ.79,900 க்கும், ஐபோன் 15 ப்ரோ மாடல் ரூ.1,34,900 க்கும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.1,59,900 வாங்க கிடைக்கிறது.

முக்கிய அம்சங்களை ப்ரௌத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஆனது 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான டிஸ்பிளேவுடன் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் / எக்ஸிநோஸ் 2400 சிப்செட் மூலம் இயங்குகிறது. மேலும் 3எக்ஸ்-ஜூம் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. இது டீஃபால்ட் ஆக 12எம்பி இமேஜ்களை கைப்பற்றுகிறது. கடைசியாக எஸ்24 ஆனது 4000mAh பேட்டரியுடன் வருகிறது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Display Issues on Samsung Galaxy S24 Series Users Facing Grainy Screen Problem in Their Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X