ஆண்ட்ராய்டு சந்தையை வென்ற விதம் இப்படிதான்...!

By Keerthi
|

இன்றைக்கு மொபைல் வாங்க போனால் நமது முதல் தேர்வு ஆண்ட்ராய்டு மொபைல் தான் அந்த அளவுக்கு இதன் வளர்ச்சி இருக்கின்றது எனலாம்.

லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம்.

#1

#1


அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான எச்.டி.சி. ட்ரீம் போனில் இது முதலில் இயங்கியது.

இன்றைக்கு இயக்கத்தில் இருக்கும் அண்மைக் காலத்திய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் தொடக்க நிலை இதுதான் என்று சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள். சிறிது கூட இன்றைய ஆண்ட்ராய்ச் சிஸ்டத்தின் சாயல் இதில் இருந்ததில்லை. செப்டம்பர் 2008ல் இது வெளியானது.

#2

#2

நல்ல விருந்திற்குப் பின்னர் சாப்பிடும் இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் கலந்த பழக் கூட்டை டெசர்ட் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பெயர்கள் எல்லாம், இவற்றின் பெயரிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடக்கம் ""கப் கேக்ஸ் அவே'' என ஆரம்பமானது. ஏப்ரல் 2009ல் வெளியானது.

#3

#3

திரைக் காட்சியில் கூடுதல் பிக்ஸெல் ரெசல்யூசன், மொபைல் டேட்டா பயன்பாட்டில் கூடுதல் திறன், வைபி இணைப்பு மற்றும் பல மேம்படுத்தல்களை இது கொண்டிருந்தது. செப்டம்பர் 2009ல் இது புழக்கத்திற்கு அறிமுகமானது.

#4

#4

தன் ஆண்ட்ராய்ட் வரிசையின் அடுத்த சிஸ்டத்தில், அதிகமான மாற்றங்களை மேற்கொண்டதால், இந்த பதிப்பின் எண் 2க்குச் சென்றது. டோனட் வெளியாகி, ஒரு மாதத்தில் அக்டோபர் 2009ல் இது வெளியானது. இதன் மூலம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு பரவலான இடம் கிடைக்கத் தொடங்கியது.

#5

#5

இந்த பதிப்பு மே, 2010ல் வெளியானது. இதன் பல முக்கிய அம்சங்களில், பிளாஷ் சப்போர்ட், யு.எஸ்.பி. போர்ட் மற்றும் வைபி ஹாட் ஸ்பாட் சப்போர்ட் ஆகியவற்றைக் கூறலாம். பல செயல் இயக்கங்களின் திறன் கூடுதலாக அமைக்கப்பட்டது.

#6

#6

டிசம்பர், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம், முழுமையும் திறன் மாற்றப்பட்ட ஆண்ட்ராய்ட் சிஸ்டமாக இருந்தது. அண்மைக் கள தகவல் தொடர்பு இணைக்கப்பட்டது.

#7

#7

இதனை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் புதிய பதிப்பு என்று முழுமையாகக் கூற முடியாது. ஆனால் சிஸ்டத்தினை டேப்ளட் பிசியில் இயங்கும் வகையில் மாற்றி அளித்தது கூகுள். இதன் ஹோலோ யூசர் இன்டர்பேஸ் சற்று மெருகூட்டப்பட்டு கிடைத்தது. இந்த பதிப்பு, 2011ல் பிப்ரவரியில் வெளியானது.

#8

#8

2011ல் வெளியான இந்த சிஸ்டம், கூகுள் டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன் ஆகிய இரண்டின் இயக்கங்களை ஒருமுகப்படுத்தியது. இன்டர்பேஸ் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டது. பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இருந்து தான் ஆண்ட்ராய்டு எளிதில் உலகம் முழுவதும் தெரிய தொடங்கியது எனலாம்

#9

#9

ஜெல்லி பீன், கூகுள் பயனாளர்களின் பயன்பாட்டினை மட்டுமே, தன் முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பதனை நிலைநாட்டியது.

ப்ராஜக்ட் பட்டர் என்ற பெயரில், சிஸ்டம் செயல்பாட்டினை மந்தப்படுத்திய சில சிறிய தவறுகளைச் சரி செய்தது. குறிப்பிட்ட சில வகை தகவல்களை, வகைப்படுத்தி தேடித் தரும் கார்ட்ஸ் என்பவை இதில் தான் அறிமுகம் செய்யப்பட்டன.

#10

#10

இதுதான் தற்போது அதிகம் நடைமுறையில் இருக்கும் ஆண்ட்ராய்டு வெர்ஷன் ஆகும்

#11

#11

இதுதாங்க தற்போதைய ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் பதிப்பாகும்.. இது மற்ற அனைத்து பதிப்புக்களை விட அட்வான்ஸ்டு ஆகும்..இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X