பாறாங்கல் மாதிரி அறிமுகமான Leica Leitz Phone 2.. ஐபோன், சாம்சங் எல்லாம் ஓத்து இனி இதுதான் கெத்து!

|

Leica Leitz Phone 1 இன் வாரிசாக Leitz Phone 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Leica Leitz Phone 2 ஆனது மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அம்சங்களில் இருந்த போட்டிக்கு மத்தியில் ஒருசில நிறுவனங்கள் வடிவமைப்பிலும் தங்களை வேறுபடுத்தி காட்டி வருகிறது. அதன்படி அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் இது.

Leica Leitz Phone 2 அறிமுகம்

Leica Leitz Phone 2 அறிமுகம்

அதன்படி சமீபத்தில் நத்திங் நிறுவனம் வித்தியாசமான முயற்சி என நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. கண் கவர் வடிவமைப்பு இருந்தாலும் இந்த நத்திங் ஸ்மார்ட்போனில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. பின்புற பேனலில் லைட்கள் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெற்றிருந்தது. இதே கோட்பாடுடன் Leica Leitz Phone 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பு

மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பு

புதிதாக அறிவிக்கப்பட்ட Leica Leitz Phone 2 ஆனது மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்புடன் வெளியாகி இருக்கிறது. இது Sharp இன் Aquos R7 ஸ்மார்ட்போனை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 47.2MP 1-இன்ச் இமேஜ் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஷார்ப் அக்வோஸ் ஆர்7 ஆதரவு

ஷார்ப் அக்வோஸ் ஆர்7 ஆதரவு

ஜப்பானிய சந்தையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஷார்ப் மற்றும் சாஃப்ட் பேங்க் உடன் இணைந்து முதல் மாடல் ஸ்மார்ட்போனான Leica Leitz Phone 1 அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாரிசாக Leica Leitz Phone 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடல் ஸ்மார்ட்போனான Leica Leitz Phone 1 ஆனது ஷார்ப் அக்வோஸ் ஆர்6 மூலம் இயக்கப்பட்டது. அதேபோல் Leica Leitz Phone 2 ஆனது ஷார்ப் அக்வோஸ் ஆர்7 மூஸம் இயக்கப்படுகிறது.

பல்வேறு குறிப்பிடத்தக்க விஷயம்

பல்வேறு குறிப்பிடத்தக்க விஷயம்

இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அதன் பிராண்டிங் பெயர் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் லைக்கா என்ற பிராண்டிங் பெயர் இடம்பெறவில்லை. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Leica Leitz Phone 2 இன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் கேமரா அம்சம் ஆகும். இந்த கேமராவானது ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் வட்ட வடிவில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதில் 47.2MP 1-இன்ச் கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாம் நிலை கேமராவாக 1.9MP டெப்த் சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 12.6MP ஸ்னாப்பர் பொருத்தப்பட்டிருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

கேமராவை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனாக புதிய Leica Leitz Phone 2 வெளியாகி இருக்கிறது. இதில் Leica M லென்ஸ்கள் மற்றும் Leitz Look போன்ற பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் துல்லியமான புகைப்படங்களை பதிவு செய்யலாம். தொழில்துறை புகைப்படக் கலைஞர்களால் விரும்பப்படக் கூடிய ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Leica Leitz Phone 2 ஆனது லைகாவால் ஈர்க்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட இடைமுகத்துடன் கூடிய Android 12 OS மூலம் இயக்கப்படுகிறது. Qualcomm Snapdragon 8 Gen 1chipset மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 1TB வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர்

இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர்

புதிய Leica Leitz Phone 2 இல் 2730 x 1260 பிக்சல்கள் WUXGA+ தீர்மானம் கொண்ட IGZO OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 240 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. லைக்கா டால்பி விஷன் மற்றும் இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

5000 mAh பேட்டரி

5000 mAh பேட்டரி

புதிய Leica Leitz Phone 2 ஆனது 2730 x 1260 பிக்சல்கள் உடனான WUXGA+ தீர்மானம் கொண்ட IGZO OLED பேனலைக் கொண்டுள்ளது. இது 240Hz புதுப்பிப்பு வீதம், 2,000 nits உச்ச பிரகாசம் மற்றும் 10-பிட் டெப்த் கலர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. லைக்கா டால்பி விஷன் மற்றும் திரைக்கான இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் ஆகியவையும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை

விலை மற்றும் விற்பனை

Leica Leitz ஃபோன் 2 ஆனது தற்போது ஜப்பானிய சந்தையில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ¥225,360 (சுமார் ரூ.1,27,915) ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை வண்ண விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

லைக்கா கேமரா போன் மேம்பட்டது என்றாலும், Samsung Galaxy S23 மற்றும் iPhone 14 போன்ற சாதனங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தையில் கிடைக்கிறது. ஏதேனும் ரிப்பேர் ஆனாலோ அல்லது ஸ்பேர் பொருட்கள் தேவைப்பட்டால் எளிதாக வாங்கி விடலாம். ஆனால் இதுபோன்ற பிரத்யேக ஸ்மார்ட்போனுக்கு கிடைப்பது சிரமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லை நான் லைக்கா ஸ்மார்போன் தான் வாங்கப்போகிறேன் என்று விரும்பினால் இதன் விற்பனை மற்றும் ஷிப்பிங் நவம்பர் 18 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Different Look and Specs Smartphone: Leica Leitz Phone 2 Launched with 1 inch Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X