நோக்கியா வெளியிட்ட டீஸர் : வெளியாகிறது பிரீமியம் நோக்கியா 3310.!
வெளியாகியுள்ள வீடியோவின் தலைப்பான "நோக்கியா 3310 போலவே உன்னை நான் நேசிக்க விரும்புகிறேன்" என்பதில் இருந்தே கருவி வெளியாவது உறுதியாகிவிட்டது.
நோக்கியா நிறுவனம் இம்மாத இறுதியில்நாடாகும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் பல வகையான நோக்கியா கருவிகளை அறிமுகம் செய்யவுள்ளது. அனுமானங்களின்படி வைகல் நோக்கியா பி1, நோக்கியா டி1சி, நோக்கியா 5, நோக்கியா 3 போன்ற ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் சேர்த்து நோக்கியா 3310 கருவியும் மறு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் நோக்கியாவின் உயர் இறுதி சாதனங்கள் சார்ந்த எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்தது ஆனால் இப்போது பெரும்பாலான எதிர்ப்பார்ப்பும் மீண்டும் வெளியாகும் என்று கூறப்படும் நோக்கியா 3310 கருவி மீதான உள்ளது. இந்நாள் வரை வெளியாகுமா.? ஆகாதா.? என்ற கேள்வி நம்மில் நிலவியது. அதை தீர்க்கும் வண்ணம் நோக்கியா மொபைல் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரீமியம் நோக்கியா 3310
நோக்கியா மொபைல் யூட்யூப்பில் வெளியாகியுள்ள வீடியோ டீஸர் ஆனது கிட்டத்தட்ட நோக்கியா 3310 கருவியின் மறு வரவை உறுதிப்படுத்துகிறது மற்றும் நிறுவனம் உண்மையில் ஒரு பிரீமியம் நோக்கியா 3310 பதிப்பை வெளிக்கொண்டுவரும் சார்ந்த வேலையில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.

தலைப்பு
வெளியாகியுள்ள வீடியோவின் தலைப்பான "நோக்கியா 3310 போலவே உன்னை நான் நேசிக்க விரும்புகிறேன்" என்பதில் இருந்தே கருவி வெளியாவது உறுதியாகிவிட்டது.

"கிளாசிக்"
உடன் டீஸரில் நோக்கியா 3310 அக்கருவி உடன் இன்றைய உயர் இறுதியில் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த ஒப்பிட்டு, மற்றும் அக்கருவி எவ்வளவு "கிளாசிக்" ஆன ஒரு கருவியாக இருந்து நமது வாழ்க்கையை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறது என்ற விடயங்கள் பகிரப்பட்டுள்ளது.

'ஸ்நேக் கேம்'
இந்த வீடியோ நம்மை பழைய காலத்திற்கு அழைத்து சென்று பல நினைவுகளை கிளப்பி விடுகிறது என்றே கூறலாம். முக்கியமாக நோக்கியா கிளாஸிக் கருவிகளின் 'ஸ்நேக் கேம்' - ஆனது இண்டெர்நெட் இல்லாமல் நமது வாழ்க்கை எவ்வளவு எளிதாக இருந்தது என்பதை பற்றி பேசுகிறது.

உயர் இறுதி
சரி, பழமையான நினைவுகள் ஒருபக்கம் இருக்கட்டும் இந்த வீடியோ மூலம் வரவிருக்கும் நோக்கியா 3310 பற்றிய விவரக்குறிப்புகள் என்னென்ன என்று பார்க்கும் போது நோக்கியா 3310 ஒரு உயர் இறுதியில் பதிப்பாக வெளி வரலாம் என்று நம்பப்படுகிறது.

விலை
அதாவது ஒரு பிரீமியம் கருவியாக நோக்கியா 3310 ஆனது ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் ரூ.4,000/- என்ற ஒரு மலிவு விலை நிர்ணயத்தில் கிடைக்க முடியும்.
வீடியோ
நோக்கியா மொபைல் வெளியிட்டுள்ள "நோக்கியா 3310 போலவே உன்னை நான் நேசிக்க விரும்புகிறேன்" வீடியோ.!

கான்செப்ட்
நோக்கியா மொபைலின் இந்த வீடியோ வெளியீட்டை முன்னே அறிந்தது போல சமீபத்தில் நோக்கியா 3310 கருவி சார்ந்த கான்செப்ட் வெளியாகி அதிர வைத்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதை காண இங்கே க்ளிக் செய்யவும் - நோக்கியா 3310, ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் (கான்செப்ட் வீடியோ).!

மேலும் படிக்க
நோக்கியாவுடன் மறைமுக மோதல் : ஐபோன் 8 காப்புரிமை லீக்ஸ்.!


Click it and Unblock the Notifications








