650எம்ஏஎச் பேட்டரி; டூயல் சிம் ஆதரவுடன் ரூ.399/-க்கு பீச்சர் போன்.!

இந்த சாதனம் 'டால்க்கிங் பீச்சர்' என்று அழைக்கப்படும் ஒரு சுவாரஸ்யமான அம்சத்துடன் வருகிறது.

|

மொபைல் போன் தயாரிப்பாளரான டிடெல் நிறுவனம், இன்று அதன் டூயல் சிம் ஆதரவு கொண்ட ஒரு பீச்சர் போனை வெறும் ரூ.399/- என்ற விலைக்கு அறிமுகம் செய்துள்ளது. டிடெல் டி1+ என்ற பெயர்கொண்டுள்ள இந்த பீச்சர் போன் ஆனது நிறுவனத்தின் முந்தைய அறிமுகமான டிடெல் டி1 வெற்றியை தொடர்ந்து சந்தையில் களம் காணவுள்ளது.

650எம்ஏஎச் பேட்டரி; டூயல் சிம் ஆதரவுடன் ரூ.399/-க்கு பீச்சர் போன்.!

இந்திய சந்தையில் ரூ.349/-க்கு கிடைக்கும் டிடெல் டி1 ப்ளஸ் ஆனது பார்வை குறைபாடுள்ள, மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுகாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் 'டால்க்கிங் பீச்சர்' என்று அழைக்கப்படும் ஒரு சுவாரஸ்யமான அம்சத்துடன் வருகிறது.

650எம்ஏஎச் பேட்டரி; டூயல் சிம் ஆதரவுடன் ரூ.399/-க்கு பீச்சர் போன்.!

டிடெல் டி1 ப்ளஸ் ஆனது B2BAdda.com தளத்தில் வருகிற ஜனவரி 26, 2018 முதல் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும். இதன் 'டால்க்கிங் பீச்சர்' அம்சமானது ஒரு தொலைபேசி எண்ணை தேடும் போதும் அல்லது டயல் செய்யும்போதும் ரியர் ஸ்பீக்கரை ஒலி எச்சரிக்கையை வழங்குவதற்கு பயன்படுத்தும். டிடெல் நிறுவனம் இந்த அம்சத்தை 'கனெக்ட் தி அன் கனெக்ட்டட்' என்ற பார்வையின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிடெல் டி1+ கருவியின் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது இரட்டை சிம் ஸ்லாட் கொண்டுள்ளது. உடன் டார்ச் லைட், ஜிபிஆர்எஸ் இணைய உலாவி, 3டி ஸ்பீக்கர், மைக்ரோ எஸ்டி அட்டை ஆதரவு, 650எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை வழங்குகிறது. 1.44 அங்குல டிஎப்டி டிஸ்பிளே கொண்டுள்ள இக்கருவி சுவாரஸ்யமாக மொத்தம் ஏழு வண்ண மாறுபாடுகளில் கிடைக்கிறது.

650எம்ஏஎச் பேட்டரி; டூயல் சிம் ஆதரவுடன் ரூ.399/-க்கு பீச்சர் போன்.!

இந்தியாவின் 40 கோடி மக்களை இலக்காகக் கொண்டுள்ள இந்நிறுவனம் அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் இணைந்து இலவச குரல் அழைப்பு திட்டத்துடன் சேர்த்து அதன் டி1 ப்ளஸ் கருவியை ரூ.499/-க்கு வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Detel D1+ Feature Phone With Dual-SIM Support and 650mAh Battery Launched at Rs 399. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X