Home
Mobile

டேப்லெட் தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய டெல் ஸ்மார்ட்போன்!

By Super

டேப்லெட் தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய டெல் ஸ்மார்ட்போன்!
மொபைல், ஸ்மார்ட்போன்கள் என தொழில்நுட்ப தலைமுறை மாறி வரும் இந்த வேளையில் அடுத்து டேப்லட்டுகள் மார்க்கெட்டை ஆட்சி செய்ய துவங்கிவிட்டன. இதை கருத்தில்க்கொண்டு டேப்லெட் வசதிகளையும் ஒருங்கே பெற்ற டெல் ஸ்ட்ரீக்-5 டேப்லட் மொபைல் பற்றி சில அற்புதமான தகவல்களை பார்க்கலாம்.

ஏனென்றால் இந்த டேப்லட் மொபைலில் மற்ற ஸ்மார்ட்போனி்ன் திரைகளில் பார்க்க முடிகின்ற தகவல்களை விடவும் சிறந்த முறையில் தகவல்ளை முழுவதுமாக பார்க்க முடியும். அதற்காகவே இதில் மிக அகன்ற திரை கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த மொபைலை பயன்படுத்தும் போது லேப்டாபை பயன்படுத்துவது போன்று உணரலாம். இந்த டெல் ஸ்ட்ரீக்-5 டேப்லட் மொபைலில் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஓஎஸ் வசதியினை அப்டேட் செய்ய இருக்கிறது இந்நிறுவனம். இதற்கும் முன்பு இதில் வெர்ஷன் 1.6, டோனட் அல்லது ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.2 ஓஎஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.

இது போன்ற புதிய தொழில் நுட்பங்களை பெறுவதன் மூலம் டெல் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். டெல் ஸ்ட்ரீக்-5 டேப்லட் மொபைலில் கிடைக்கும் இந்த அதி நுட்ப வசதிகள் நிச்சயம் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு, எலக்ட்ரானிக் சாதன உலகிற்கு ஒரு சவாலாகவும் இருக்கும்.

புதிய ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்யும் பொழுது, மொபைலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் சில தகவல்கள் அழிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்யும் முன்பு, மொபைலில் இருக்கும் தகவல்களை லேப்டாப்பிலோ அல்லது

கம்ப்யூட்டரிலோ பேக்கப் பைல்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு அப்டேட் செய்வது நல்லது.

புதிய ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்த பின்னர் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருக்கும் தகவல்களை மீண்டும் மொபைலில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் தகவல்கள் அழியாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X