கண்கவரும் வடிவமைப்பில் டெல் எக்ஸ்சிடி-35 ஸ்மார்ட்போன்!

Posted By: Staff

கண்கவரும் வடிவமைப்பில் டெல் எக்ஸ்சிடி-35 ஸ்மார்ட்போன்!
டெல் எக்ஸ்சிடி-35 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது டெல் நிறுவனம். இதன் வடிவமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களை வாங்கத்தூண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது ஆன்ட்ராய்டு வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.

இந்த டெல் எக்ஸ்சிடி-35 மொபைல் 3.5 டிஎப்டி டச் ஸ்கிரீன் திரை கொண்டது. இதில் ஏஆர்எம் 11 600 எம்எச்இசட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 3.2 எம்பி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மொபைல் நிச்சயம் திருப்திகரமான புகைப்படத்தைக் கொடுக்கு்ம் என்று நம்பப்படுகிறது.

இந்த மொபைல் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்யும். டெல் எக்ஸ்சிடி-35 மொபைலில், வைபையின் மூலம் நெட் வசதியினைப் பெற முடியும். இதில் ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி வசதியும் உள்ளது.

இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ள யூஎஸ்பி வசதியினால் கணினியில் இருந்து தகவல்களைப் போனுக்கு எளிதாக பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இதில் டபிள்யூஏபி வசதியும் உள்ளது. இதன் மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 16 ஜிபி மெமரியைப் பெற முடியும். தகவல்களை எளிதாகப் பரிமாறிக் கொள்ள இதில் புளூடூத் வசதியும் உள்ளது. இந்த மொபைல் 200 எம்பி இன்டர்னல் மெமரியையும் வழங்குகிறது.

இது எட்ஜ் தொழில் நுட்பம் கொண்டது. இதன் எப்எம் ரேடியோ வசதியினைக் கேட்டு மகிழலாம். இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.இந்திய சந்தையில் மதிப்பு ரூ.9,500 இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot