டெல்-பாய்டு கூட்டணியில் வரும் புதிய ஸ்மார்ட்போன்கள்

Posted By: Staff

டெல்-பாய்டு கூட்டணியில் வரும் புதிய ஸ்மார்ட்போன்கள்
டெல் நிறுவனமும் மற்றும் சீனாவின் பாய்டு நிறுவனமும் சேர்ந்து புதிய கணினிகள், மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளை உலகத்திற்கு அறிமுகப்படுத்த உள்ளன.

சீனாவில் மொபைல் வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. அங்கு 900க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. இந்தச் சூழலில் டெல் பாய்டு கூட்டணி ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு கலக்கத்தை எற்படுத்தி வருகிறது.

வரும் நவம்பரில் இந்த கூட்டணியிலிருந்து முதல் ஸ்மார்ட் போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதைப் பற்றிய செய்தியை வெளியிட டெல் நிறுவனம் தயங்குகிறது.

கடந்த வாரம் பாய்டு நிறுவனம் தமது புதிய மொபைலைப் பற்றிய குறுந்தகவலை வெளியிட்டது. அதாவது அவர்களின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள முறையில் இருக்கும் என்பதாகும். மேலும் அவர்கள் ஏற்கனவே எல் போன்ற நிறவனங்களோடு விளம்பர உறவு கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவர்களின் புதிய விளம்பர உறவுகளைப் பற்றி வெளியிட மறுத்துவிட்டனர். அதனால் அவர்களின் டெல்லோடு உள்ள உறவு ஒரு வகையில் உறுதியாகிறது என்று சொல்லலாம். குறிப்பாக சீனாவில் அலிபாபா நிறுவனம் அலியுன் ஓஎஸ் கொண்ட மற்றும் க்ளவுட் கம்யூட்டிங் கொண்ட கே-டச் டபுள்யு போன்களை அறிமுகப்படுத்தியது.

இந்த போன்களை விரைவில் நாம் கடைகளில் பார்க்க முடியும். மேலும் இந்த போன் அலிபாபா மற்றும் யாகூ கூட்டணியில் வந்தவையாகும். அதனால் டெல்-பாய்டு கூட்டணி அலிபாபா-யாகூ கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய கூட்டணியில் வரும் ஸ்மார்ட்போன்கள் சீன வாடிக்கையாளர்களை மிரட்டும் என நம்பலாம்.

ஆனால் மற்ற நாடுகளுக்கும் இந்த புதிய மொபைல்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்து வருகிறது. அதன் மூலம் உலக அளவில் நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறது. தற்போது சீன மொபைல் சந்தையில் ஆப்பிள் மற்றும் லெனோவா நிறுவனங்கள் ஆதிக்கம் செய்து வருகின்றன.

அதனால் இந்த டெல்-பாய்டு கூட்டணி முதலில் சீன மொபைல் சந்தையை அதிகம் குறிவைத்து வருகிறது. ஆனால் இந்த கூட்டணிக்கும் மற்ற மொபைல் நிறுவனங்களும் கடும் போட்டியாக இருக்கும் என உறுதியாக கூறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot