இதில 1 பூனை குட்டி.. இன்னொன்னு புலிக்குட்டி.! அட்டகாசமா ரெடியாகும் Vivo S16 மற்றும் Vivo S16e.!

|

Vivo S15 மற்றும் Vivo S15 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களை நிறுவனம் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, ஏழு மாதங்களுக்குப் பிறகு, விவோ இந்த புதிய ஸ்மார்ட்போன் வாரிசுகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

Vivo S16 மற்றும் Vivo S16e ஆகியவற்றை நாம் என்ன அம்சங்களுடன் சந்தையில் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். இந்த வாரம் தான், இரண்டு சாதனங்களும் Geekbench இல் தோன்றின, அதே நேரத்தில் புரோ மாடலின் தகவலை டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டோஃபர் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. Vivo S16e மாடலுடன் விவோ நிறுவனம் இந்த மாத இறுதியில் மற்ற இரண்டு சாதனங்களையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யுமென்று இன்று சில தகவல்கள் லீக் செய்யப்பட்டுள்ளது.

இதில 1 பூனை குட்டி.. இன்னொன்னு புலிக்குட்டி.! Vivo S16-Vivo S16e ரெடி!

டிப்ஸ்டர் இஷான் அகர்வால் வெளியிட்ட தகவல்படி, Vivo S16 ஆனது 6.78' இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 2400×1080 பிக்சல் தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வரும். இது ஸ்னாப்டிராகன் 870 சாதனத்தை இயக்குகிறது. இது போனின் கீக்பெஞ்ச் பட்டியலுக்கு ஏற்ப உள்ளது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படும். சாதனம் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் OriginOS 3.0 உடன் அனுப்பப்படும்.

Vivo S16 மூன்று ரியர் கேமரா அமைப்புடன் 64MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 50எம்பி முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இது 4,600mAh பேட்டரியை 66W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மறுபுறம், Vivo S16e ஸ்மார்ட்போனின் அம்சத்திற்கு வரும்போது, ​​இது 6.62' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 2400×1080 பிக்சல் தெளிவுத்திறன் கொண்டிருக்கும்.

இதில 1 பூனை குட்டி.. இன்னொன்னு புலிக்குட்டி.! Vivo S16-Vivo S16e ரெடி!

சுவாரஸ்யமாக, Vivo இங்கு Samsung இன் Exynos 1080 சிப்செட்டைப் பயன்படுத்துகிறது. இது 12GB RAM மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமரா பிரிவில், Vivo S16e ஆனது 2MP போர்ட்ரெய்ட் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ்களுடன் 50MP பிரைமரி சென்சாரை பெறுகிறது. முன்பக்கத்தில், 16MP கேமராவைப் பெறுகிறது.

Vivo S16 ஐப் போலவே, Vivo S16e ஆனது 66W சார்ஜிங்குடன் 4,600mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த இரண்டு சாதனமும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் NFC ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த 2 போன்களின் அம்சங்களை வைத்து பார்க்கையில், Vivo S16e ஸ்மார்ட்போன் பூனை குட்டியாகவும், Vivo S16 ஸ்மார்ட்போன் சாதனம் புலிக்குட்டி போன்ற மிரட்டலான அம்சத்துடன் காட்சியளிக்கிறது.

Vivo S16 தொடருக்கான வெளியீட்டுத் தேதி இன்னும் வெளியாகவில்லை ஆனால், இந்த மாத இறுதியில் இந்த போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என வதந்திகள் பரவியுள்ளன. பிராண்ட் இந்தியாவில் Vivo S15 ஐ அறிமுகப்படுத்தவில்லை, எனவே S16 தொடர் நாட்டிலும் வெளியிடப்படுமா இல்லையா என்பது சிறிய கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆயினும் கூட, Vivo S16 மற்றும் S16e விவரக்குறிப்புகளைப் பார்த்து வைத்துக்கொள்வது சிறந்தது. காரணம், அடுத்து நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போகும் அதன் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இது பெரிதும் பயனுள்ளதாய் அமையும்.

Best Mobiles in India

English summary
Deference Between Vivo S16 and Vivo S16e Check The Specification Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X