நல்ல மாசம் பொறக்குது.. டிசம்பர் 2025-ல் அறிமுகமாகும் 14 புது போன்கள்.. OnePlus முதல் Redmi வரை.. இதோ லிஸ்ட்!
ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்
அப்படியாக கூகுள் பிக்சல் 10 சீரீஸ், ஐபோன் 17 சீரீஸ், சியோமி 17 சீரீஸ், ரெட்மி கே90 சீரீஸ் மற்றும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 9 சீரீஸ் மாடல்கள் அறிமுகமானதை நாம் பார்த்தோம். அவற்றில் சில சீன சந்தைகளில் மட்டுமே கவனம் செலுத்தினாலும், மற்றவை படிப்படியாக இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதம் ஆன டிசம்பரும் கூட புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடுகளால் நிரம்பும் என்பது போல் தெரிகிறது. ஏனெனில் பல மிட்ரேன்ஜ் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் 2025 டிசம்பரில் இந்தியாவிற்கு வர உள்ளன. அப்படியாக டிசம்பர் 2025 இல் வரவிருக்கும் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones December 2025), எந்தெந்த தேதிகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற பட்டியல் இதோ:
1. விவோ எக்ஸ்300 சீரீஸ் (Vivo X300 Series) - இது டிசம்பர் 2 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் பிளாக்ஷிப் சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும்.
2. ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) - இது டிசம்பர் 3 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதே ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஆக ரீபிராண்ட் செய்யப்படும்.
3. ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G): இது டிசம்பர் 4 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
4. ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R): இது டிசம்பர் 17 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிசம்பர் 2025 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
5. ஒப்போ ரெனோ 15சி (Oppo Reno 15C)
6. விவோ எஸ்50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini)
7. விவோ எஸ்50 (Vivo S50)
8. ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G)
9. ஹானர் ஜிடி 2 சீரீஸ் (Honor GT 2 Series)
10. போக்கோ சி85 5ஜி (Poco C85 5G)
11. ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5)
12. விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE)
13.ஒப்போ ஏ6எக்ஸ் (Oppo A6x)
14. ரெட்மி மேஜிக் 11 ஏர் (Redmi Magic 11 Air)
இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 இல் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.72,999 ஆகும். அதாவது ஒன்பிளஸ் 15ஆர் மாடலின் எதிர்பார்க்கப்படும் விலையை விட சுமார் ரூ.28,000 குறைவாகும்.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை - ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 16 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட 8000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








