Home
Mobile

பட்ஜெட் விலையில் 40-இன்ச் தைவா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

இந்த சாதனத்தில் ஏ-பிளஸ் கிரேடு பேனல் இடம்பெற்றுள்ளது, பின்பு 20வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் அமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

தைவா நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. தற்சமயம் அந்நிறுவனம் 40-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்
டிவி மாடல் எண் D42E50S என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 40-இன்ச் தைவா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 40-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட தைவா ஸ்மார்ட் டிவி 40-இன்ச் முழு எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1,920 x 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் பெசல்ஸ் வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

40-இன்ச் தைவா ஸ்மார்ட் டிவி மாடல் கார்டெகஸ் ஏ53 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபப் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ:

ஆடியோ:

இந்த சாதனத்தில் ஏ-பிளஸ் கிரேடு பேனல் இடம்பெற்றுள்ளது, பின்பு 20வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் அமைப்புடன் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது. எனவே உயர் தர ஆடியோ அம்சத்தை வெளிபடுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் விதமாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

40-இன்ச் தைவா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல்வேறு செயலிகளை கண்டிப்பாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

விலை மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி, டிஎப்டி கார்டு ஸ்லாட், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இந்த 40-இன்ச் தைவா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி சாதனத்தை ரூ.18,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Daiwa D42E50S 40-inch Android-based TV launched in India price specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X