இந்த Phone-ஐ வாங்கினால் அதில் Free ஆக உங்கள் பெயரை எழுதி கொடுப்பாங்க!

|

இனிமேல் எக்ஸ்ட்ரா செலவு செய்து, உங்கள் பெயர் பொறித்த மொபைல் பேக் கேஸை (Moble Back Case) ஆர்டர் செய்து வாங்கி, அதை உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை!

ஏனெனில், ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம், தனது லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சுவாரசியமான இலவச சலுகையை அறிவித்துள்ளது!

அது எந்த கம்பெனி? என்ன இலவசம்?

அது எந்த கம்பெனி? என்ன இலவசம்?

அது இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா (Lava) நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தனது லாவா அக்னி 5ஜி (Lava Agni 5G) ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயர்களை, அந்தந்த போன்களின் பேக் பேனலில் பொறித்து கொடுக்கும் சலுகையை அறிவித்துள்ளது; அதுவும் முற்றிலும் இலவசமாக!

இந்த சலுகையை பெறுவது எப்படி? இந்த பெர்சனலைசேஷன் ஆபர் வேறு என்னென்ன மாடல்களின் மீது அணுக கிடைக்கும்? லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இது விலைக்கு ஏற்ற வொர்த் ஆன ஸ்மார்ட்போன் தானா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!

Lava நிறுவனத்தின் MyAgni அம்சம்!

Lava நிறுவனத்தின் MyAgni அம்சம்!

இந்தியாவின் முன்னணி உள்நாட்டு மொபைல் நிறுவனங்களில் ஒன்றான லாவா மொபைல்ஸ், அதன் அக்னி 5ஜி ஸ்மார்ட்போனின் மீது மட்டுமே "மேற்குறிப்பிட்ட" பெர்சனலைசேஷனுக்கான (Personalisation) ஆதரவை வழங்குகிறது.

அதாவது லாவா நிறுவனத்தின் அக்னி 5ஜி ஸ்மார்ட்போனில் மட்டுமே உங்கள் பெயரை பொறிக்க முடியும்.

லாவா நிறுவனம் இந்த சலுகையை 'MyAgni' என்று அழைக்கிறது. இதன் கீழ் நீங்கள் வாங்கும் அக்னி 5G ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் உங்கள் பெயர், அல்லது உங்கள் செல்லப்பிராணியின் பெயர், அல்லது உங்கள் அன்புக்கு உரியோரின் பெயர் அல்லது "வேறு எதையும்" கூட பொறிக்க முடியும்.

லாவா ஸ்மார்ட்போனில் உங்கள் பெயரை பொறிப்பது எப்படி?

லாவா ஸ்மார்ட்போனில் உங்கள் பெயரை பொறிப்பது எப்படி?

லாவா நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரான lavamobiles.com வழியாக வாடிக்கையாளர்கள் இந்த பெர்சனலைசேஷனுன் சலுகையை பெறலாம்.

இதற்காக லாவா இணையதளத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை உள்ளிட வேண்டும், பின்னர் அவர்களுக்கான 'கூப்பன் கோட்' உருவாக்கப்படும்; தத்தம் ஸ்மார்ட்போன்களில் விருப்பமான பெயர்களை பொறிக்கும் "வேலைப்பாடுகளை" பெற அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Infinix Hot 12 Pro: எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!Infinix Hot 12 Pro: எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!

உள்ளூர் கடையில் வாங்கினால் இந்த சலுகை அணுக கிடைக்குமா?

உள்ளூர் கடையில் வாங்கினால் இந்த சலுகை அணுக கிடைக்குமா?

கிடைக்காது! நீங்கள் அக்னி 5G ஸ்மார்ட்போனை மூன்றாம் தரப்பு இணையதளம் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடையில் வாங்கினால், லாவா நிறுவனத்தின் MyAgni அம்சம் உங்களுக்கு அணுக கிடைக்காது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக அக்னி 5ஜி போனை வாங்கினால் மட்டுமே அதில் உங்கள் பெயர் பொறிக்கப்படும்!

இதுஒருப்பக்கம் இருக்க, இந்த சலுகையின் கீழ் வாங்கிய லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுமா அல்லது அதற்காக அவர்கள் லாவா நிறுவனத்தின் ஸ்டோர்களுக்கு செல்ல வேண்டுமா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது!

Lava Agni 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Lava Agni 5G ஸ்மார்ட்போனின் விலை என்ன?

நினைவூட்டும் வண்ணம், Agni 5G ஆனது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் ரூ.17,999 என்கிற அறிமுக விலையின் வாங்க கிடைத்த, இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999 ஆகும். தற்போது இது அசல் விலையின் கீழ், அதாவது ரூ.19,999 க்கு தான் வாங்க கிடைக்கிறது!

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

 ரூ.19,999 க்கு Lava Agni 5G போன் வொர்த்-ஆ?

ரூ.19,999 க்கு Lava Agni 5G போன் வொர்த்-ஆ?

நிறைகளை பற்றி பேசினால் இதில் உள்ள 90Hz ரெஃப்ரெஷ் ரேட், ஸ்டாக் ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸ், திறமையான ப்ராசஸர் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கை குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.

அதே சமயம் குறைகளை பற்றி பேசும் போது இதன் கேமராக்கள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக வீடியோ பதிவின் போது ஸ்டெபிலைசேஷன் இல்லை!

எனவே யாருக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ, அதை மனதிற்கொண்டு லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கவும்!

Photo Courtesy: Lava

Best Mobiles in India

Read more about:
English summary
Customers Print Their Name on Back Panel Of This Smartphone For Free Lava Agni 5G Customization

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X