Home
Mobile

கிங்காங்கே தூக்கி எறிஞ்சாலும் உடையாத Cubot KingKong X போன்.. 2 டிஸ்பிளே.. 2TB ஸ்ட்ரோராஜ்.. என்ன விலை?

கியூபோட் (Cubot) நிறுவனம் மாஸாக ஒரு புது ரக்டு ஸ்மார்ட்போன் (Rugged Smartphone) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஸ்மார்ட்போனிற்கு பெயரே மாஸாக அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூட நாம் கூறலாம். அப்படி என்ன பெயருப்பா என்று கேட்கிறீர்களா? கியூபோட் அறிமுகம் செய்துள்ள அதன் புதிய சாதனத்திற்கு கியூபோட் கிங்காங் எக்ஸ் (Cubot KingKong X) என்று பெயரிட்டுள்ளது. இதுவொரு ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் என்பதனால், இதன் வலிமை மற்றும் உறுதியை பிரதிபலிக்கும் வகையில் இந்த பெயரை போனுக்கு சூட்டியுள்ளதாக கியூபோட் தெரிவித்துள்ளது.

கியூபோட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய கியூபோட் கிங்காங் எக்ஸ் ரக்டு ஸ்மார்ட்போன் (Cubot KingKong X Rugged Smartphone) சாதனம் பல சூப்பர் அம்சங்களை பேக் செய்துள்ளது. கவனத்தை ஈர்க்கும் அம்சமாக இதில் இரண்டு டிஸ்பிளே (dual display) வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் இயங்கும் பெரிய டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் ஒரு சிறிய டச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

கிங்காங்கே தூக்கி எறிஞ்சாலும் உடையாத Cubot KingKong X போன்..

கியூபோட் கிங்காங் எக்ஸ் ரக்டு ஸ்மார்ட்போன் (Cubot KingKong X Rugged Smartphone):

இந்த சிறிய டிஸ்பிளே மூலம் போனின் நோட்டிபிகேஷன் (Notification), மியூசிக் கண்ட்ரோல் (Music control) மற்றும் பல சேவைகளை பயனர்கள் அணுக முடியும் என்று கியூபோட் தெரிவித்துள்ளது. இந்த Cubot KingKong X ஸ்மார்ட்போன் சாதனம் மிலிட்டரி கிரேட் (Military grade) தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது MIL-STD-810H சான்றிதழை பெற்ற மிகவும் உறுதியான ரக்டு ஸ்மார்ட்போன் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கீழே விழுந்தாலும் உடையவே உடையாது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த கியூபோட் கிங்காங் எக்ஸ் ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water and dust resistance) பாதுகாப்பை வழங்கும் IP68 சான்றுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மிட் ரேஞ் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 (MediaTek Dimensity 7050) சிப்செட் உடன் வருகிறது. இது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற தரமான சிப்செட்டாக புகழப்படுகிறது. இது 2023 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கியூபோட் கிங்காங் எக்ஸ் (Cubot KingKong X) சாதனத்தின் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 16GB ரேம் (RAM) உடன் 256GB மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ் (Storage) உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்கு 2TB வரையிலான மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு ஸ்லாட் (microSD card slot) அம்சத்தை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

10,000mAh பேட்டரி.. 100MP கேமராவுடன் Cubot KingKong X விலை என்ன?

இது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் வெளிவரும். இந்த கியூபோட் கிங்காங் எக்ஸ் (Cubot KingKong X) சாதனம் 10,000mAh பேட்டரி (Battery) உடன் வெளிவரும். இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 100MP கேமராவை கொண்டுள்ளது. இதில் NFC மற்றும் வைஃபை 6 (WiFi 6) அம்சங்கள் கூட இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைமுறை ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் அம்சங்களை பயனர்கள் எதிர்பார்கிறார்களோ அது எல்லாமே இந்த போனில் இருக்கிறது.

உண்மையை சொல்ல போனால், வழக்கமான ஸ்மார்ட்போன்களை விட இதில் சற்று அதிகப்படியான நன்மைகள் இருக்கிறது. இது 10,000mAh பேட்டரி, டூயல் டிஸ்பிளே, 100MP கேமரா, உடையவே உடையாத வலிமையான பாடி என்று பல அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 20,000 விலை புள்ளியில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் அறிமுகம் ஜூலை இறுதிக்குள் நடைபெறும். ஆன்லைன் வழியாக மட்டுமே ஆர்டர் செய்ய கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Cubot KingKong X Rugged Smartphone With Dual Touch Display 2TB Storage 16GB RAM 10000mAh Battery Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X