Home
Mobile

கலக்குறே Croma.. ஜனவரி 26 வரை iPhone-கள், Smart TV-கள் மீது வேற லெவல் டிஸ்கவுண்ட்!

அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இகாமர்ஸ் தளங்களை போலவே க்ரோமா (Croma) தனது 2026 குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்து உள்ளது. இதன் கீழ் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மீது பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கிறது

இந்த விற்பனை இந்தியா முழுவதுமாக க்ரோமா ஆன்லைன் மற்றும் பிசிக்கல் ஸ்டோர்களில் நேரலையில் உள்ளது மற்றும் இது வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், வங்கி தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் டீல்கள் ஆகியவற்றின் கலவையுடன், வாங்குபவர்கள் மிகக் குறைந்த விலையில் பிரீமியம் கேஜெட்களை சொந்தமாக்கலாம்.

கலக்குறே Croma.. iPhone-கள், Smart TV-கள் மீது வேற லெவல் டிஸ்கவுண்ட்!

ஐபோன் மீதான ஆபர்கள்: இந்த விற்பனையின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று ஆப்பிள் ஐபோன்களுக்கான தள்ளுபடி. ரூ.82,900 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 17 (iPhone 17) மாடலை இப்போது ரூ.47,990 க்கு வாங்கலாம். இந்த விலையில் ரூ.23,500 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், ரூ.8,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.2,000 பேங்க் கேஷ்பேக் ஆகியவை அடங்கும்.

இட்த்ஹபோல ஐபோன் 15 மாடலும் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் வாங்க கிடைக்கிறது. ரூ.14,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு, ரூ.4,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 1,000 வங்கி கேஷ்பேக் உடன், ஐபோன் 15 மாடலின் பயனுள்ள விலையை ரூ. 31,990 ஆக குறைக்க முடியும். இது ஐபோன் 15 மீது தற்போது கிடைக்கும் பெஸ்ட் டீல்களில் ஒன்றாகும்.

சாம்சங் போன்கள் மீதான ஆபர்கள்: இந்த விற்பனையின் போது சாம்சங் ஸ்மார்ட்போன்களும் பெரிய தள்ளுபடிகளை பெறுகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) மாடலை எக்ஸ்சேன்ஜ் செய்தால் சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25) மாடலை சுமார் ரூ.50,499 க்கு வாங்கலாம்.

பிரீமியம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடலை வாங்க சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவை (Samsung Galaxy S24 Ultra) எக்ஸ்சேஞ்ச் செய்தால் - ரூ.79,999 க்கு எஸ்25 அல்ட்ரா டைக்கும். இஸட் ஃபோல்ட் 6-ஐ எக்ஸ்சேன்ஜ் செய்தால் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7 மாடல் ரூ.1,09,999 கிடைக்கும்.

லேப்டாப், டிவி மீதான ஆபர்கள்: முன்னரே குறிப்பிட்டபடி இந்த விற்பனை ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமல்ல. ஆப்பிளின் மேக்புக் ஏர் எம்4 மாடல் ஆனது கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் ரூ.55,911 க்கு கிடைக்கிறது. விண்டோஸ் லேப்டாப் பயனர்கள் இந்த விற்பனையின் போது சுமார் ரூ,48,130 க்கு எபி ஆம்னிபுக் 5 மாடலை வாங்கலாம்.

டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சிறந்த சலுகைகளை பொறுத்தவரை சாம்சங் 65-இன்ச் நியோ QLED டிவியின் விலை ரூ.98,990 க்கும், டிசிஎல் 55-இன்ச் QLED டிவியின் விலை ரூ.38,990 க்கும் வந்துள்ளது. வாஷிங் மெஷின்கள் சுமார் ரூ.31,290 முதல் தொடங்குகின்றன; மார்ஷல் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ தயாரிப்புகள் 35% வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. சில ஏர் கண்டிஷனர்கள் ரூ.11,500 மதிப்புள்ள இலவச ஆட்-ஆன்களுடன் வருகின்றன.

ஐபோன் 17 மாடலின் விரிவான அம்சங்கள்: ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்கும் ஐபோன் 17 மாடல் ஆனது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மேலும் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவானது - புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனலை ஆதரிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் மாடல்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும். மேலும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள ஐபோன் 17 மாடலின் கேமராக்களை பொறுத்தவரை - இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது

இந்த சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும். இதனுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவை பெறுவீர்கள்.

சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 மாடல் ஆனது ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, பவர் எபிஷியன்ட் ஏஐ இன்பெரென்ஸ் (Power-efficient AI inference), அதிகரித்த மெமரி பேண்ட்வித் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 மாடலின் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது, பேஸிக் ஸ்டோரேஜ் ஆக 256ஜிபி உள்ளது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐபோன் 17 மாடல் ஆனது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்கும். மேலும் இது வேகமாக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஆப்பிளின் கூற்றுப்படி சில நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும்; 10 நிமிட சார்ஜ் எட்டு மணிநேர பயன்பாட்டை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Croma Republic Day Sale 2026 Discounts on iPhones Samsung Phones TV an more until January 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X