Home
Mobile

மொத்தம் 3 டிஸ்பிளே.. மூன்றாக மடிக்கலாம்.. Huawei-ன் Tri-Fold Smartphone.. விலையை சொன்னா நம்புவீங்களா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் கான்செப்ட்களாக மட்டுமே இருந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள், இன்று பலருடைய கைகளில் இருக்கிறது. சாம்சங் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களுக்கு போட்டியாக பல நிறுவனங்கள் தத்தம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இந்த பட்டியலில் கூகுள் மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களும் அடக்கம். இதற்கிடையில் ஹூவாய் நிறுவனமானது மூன்றாக மடிக்கக்கூடிய ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் ஒரு உயர் அதிகாரியின் கைகளில் காணப்பட்ட இந்த ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ஹூவாய் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் லீக் புகைப்படத்தை வைத்து - கேமரா மாட்யூல், ஃபார்ம் பேக்டர் மற்றும் ஹேண்ட்-ஆன் அப்பியரன்ஸ் ஆகியஅதன் பல்வேறு வடிவமைப்பு கூறுகளை அறிந்துகொள்ள முடிகிறது. இந்த ட்ரை-ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஆனது டிரிபிள் ஃபோல்டிங் ஸ்கிரீன்களுடன் வெகுஜன சந்தையை சந்திக்கும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

மொத்தம் 3 டிஸ்பிளே.. மூன்றாக மடிக்கலாம்.. Huawei-ன் Tri-Fold Phone!

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இது பின்புறத்தில் வளைய வடிவமைப்புடன் வட்ட வடிவிலான கேமரா அமைப்பை கொண்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் ஓப்பன் மற்றும் விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ போன்ற மற்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை போலவே இதன் கேமரா அமைப்பும் மையத்தில் வைக்கப்படும் என்று ஊகிக்கப்படுகிறது.

மூன்றாக மடிக்கக்கூடிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இது மிதமான மற்றும் மெல்லிய வடிவமைப்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மூன்று டிஸ்பிளேக்களில் இரண்டு உள்நோக்கியும் மற்றொன்று வெளிப்புறமாக மடிந்திருக்கும். இது 10-இன்ச் இன்னர் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம், செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் ஆனது இடதுபுற ஸ்க்ரீனில் அமைந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் மடிக்கக்கூடிய ஸ்க்ரீன்கள் மூன்று தனித்தனி பிரிவுகளைக் கொண்ட டூயல்-கீல் அமைப்பை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மற்றொரு அறிக்கை இது கிரின் 9 சீரீஸ் சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று கூறுகிறது, கிரின் 9010 ஆனது மிகவும் சாத்தியமான விருப்பங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இதே சிப்செட் தான் வரவிருக்கும் ஹூவாய் மேட் 70 சீரீஸை (Huawei Mate 70 Series) இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விலைக்கு வரும்? விலையைப் பொறுத்தவரை, ஹூவாய் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் விலையுயர்ந்த வெகுஜன சந்தை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி மாதிரிக்கான செலவானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.3,35,000 ஆகும் என ஊகிக்கப்படுவதால், இது அதிக இன்னும் அதிக விலைக்கு அறிமுகமாகும் இனத்தில் சந்தேகமே வேண்டாம்.

அதாவது இது சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 9 Pro Fold) மாடலை விட அதிக விலைக்கு வரும். இந்தியாவில் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது Obsidian மற்றும் Porcelain கலர்களில் வாங்க கிடைக்கும். இது பிளிப்கார்ட் (Flipkart), க்ரோமா (Croma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) வழியாக ஆகஸ்ட் 22 முதல் விற்பனைக்கு வரும். பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ,79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போநின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனை போலவே மீதமுள்ள 3 மாடல்களும் பிளிப்கார்ட், க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வழியாக ஆகஸ்ட் 22 முதல் விற்பனைக்கு வரும். Photo Courtesy: yankodesign.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Costliest Foldable Phone on the cards Huawei Tri Fold Smartphone Price Design Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X