பட்ஜெட் விலையில் அசத்தலான கூல்பேட் நோட் 6 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் 8எம்பி + 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள.
கூல்பேட் நிறுவனம் தற்சமயம் அசத்தலான கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தங்கம் மற்றும் சாம்பல் நிறத்தில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூல்பேட் நோட் 6 சாதனத்தின் விலை மதிப்பு ரூ.8,999-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூல்பேட் நோட் 6 :
கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு
கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் 8எம்பி + 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4070எம்ஏஎச்:
கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போனில் 4070எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் அசத்தலான கைரேகை சென்சார் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications