குறைந்த விலை தெறிக்க விடும் சிறப்பம்சங்கள் : சீன நிறுவனம் அதிரடி.!!

Written By:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூல்பேட் நிறுவனம் நோட் 3 எனும் கருவியை ரூ.8,999 பட்ஜெட்டில் வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் அந்நிறுவனம் இதே கருவியை குறைந்த அளவில் முந்தைய கருவியை விட குறைந்த விலையில் அறிவித்துள்ளது. அதன் படி புதிய கூல்பேட் நோட் 3 லைட் இந்திய சந்தையில் ரூ.6,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை குறைக்கப்பட்டிருந்தாலும் சிறப்பம்சங்களை பொருத்த வரை அந்நிறுவனம் எவ்வித குறையும் வைக்க வில்லை என்பதோடு விலை பட்டியலில் புதிய வழிமுறையை கட்டமைத்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

விற்பனையை பொருத்த வரை கூல்பேட் நோட் 3 லைட் கருவியானது அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது. ப்ளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கும் கூல்பேட் நோட் 3 லைட் கருவியில் அனைவரையும் வியக்க வைக்கும் தலைசிறந்த சிறப்பம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வேகமான கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

செவ்வக வடிவில் வழங்கப்பட்டிருக்கும் கைரேகை ஸ்கேனர் ப்ரைமரி கேமராவின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட் என்றாலும் இந்த கைரைகை ஸ்கேனர் வேகமாக இயங்குகின்றது என்றே கூற வேண்டும்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

கையில் இருந்து நழுவாமல் இருக்கும் படி பின்புறம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவியின் ஓரங்களில் தங்க நிற பேனல் கருவியை மேலும் அழகாக காண்பிக்கின்றது.

திரை

திரை

கூல்பேட் நோட் 3 கருவியில் முந்தைய கருவியை விட குறைந்த அளவு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கின்றது.

வேகம்

வேகம்

சீராக இயங்க ஏதுவாக கூல்பேட் நோட் 3 லைட் கருவியானது 64-பிட் மீடியாடெக் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் எம்டி6735 குவாட்கோர் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. 64-பிட் சிப்செட் என்பதால் இந்த கருவியின் வேகம் சீராக இருக்கும்.

ரேம்

ரேம்

நோட் 3 லைட் கருவியின் மற்றொரு சிறப்பம்சமாக இருப்பது தான் 3ஜிபி ரேம். இத்தகைய குறைந்த விலையில் 3ஜிபி ரேம் கொண்ட முதல் கருவி இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை கூல்பேட் நோட் 3 கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேரா ஆட்டோஃபோகஸ், ப்ளாஷ்லைட் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான கேமரா கொண்ட கருவியை வாங்க நினைப்போருக்கு இந்த கருவி கச்சிதமாக இருக்கும் என்றே கூற வேண்டும்.

மென்பொருள்

மென்பொருள்

மென்பொருள் தரப்பில் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப், மற்றும் கூல்பேட் நிறுவனத்தின் கூல் யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

பட்ஜெட் விலை என்ற போதும் கூல் பேட் நோட் 3 லைட் கருவியில் 4ஜி எல்டிஈ வழங்கப்பட்டுள்ளது.

மாடல்

மாடல்

இந்தியாவில் கூல்பேட் நோட் 3 லைட் கருவி ஷாம்பெயின் வைட் மற்றும் கருப்பு என இரு நிறங்களில் கிடைக்கின்றது.

பட்ஜெட்

பட்ஜெட்

இறுதியாக கொடுக்கும் ரூ.6,999 விலைக்கு கூல்பேட் நோட் 3 லைட் கருவியில் நிச்சயம் தலைசிறந்த கருவி என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஸ்கிரீன் கார்டு மற்றும் வழக்கமான ஸ்மார்ட்போன் அக்சசெரிகளுடன் இன்த கருவி கிடைக்கின்றது. தற்சமயம் வரை இந்த கருவியானது அமேசான் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Coolpad Note 3 Lite: 10 Groundbreaking Features of the Successor. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்