கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் மெகா 3 மற்றும் நோட் 3S ஆகிய 2 புதிய வகை ஸ்மார்ட்போன்களின் சிறப்புகள்

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதியதாக காலடி எடுத்து வைத்துள்ள கூல்பேட்( Coolpad) ஸ்மார்ட்போன் நிறுவனம் இம்மாதம் இரண்டு விதமான புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் மெகா 3 மற்றும் நோட் 3S ஆகிய 2 புதிய வகை

கூல்பேட் மெகா 3 மற்றும் நோட் 3S ஆகிய இந்த இரண்டு போன்களின் விலை முறையே ரூ.6,999 மற்றும் ரூ.9,999 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு வகை புதிய ஸ்மார்ட்போன்களும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா இணையதளத்தில் கிடைக்கும்

10,900 எம்ஏஎச் - 'மரண அடி அடித்தாலும்' பேட்டரி மட்டும் காலியே ஆகாது.!

கூல்பேட் மெகா 3 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று சிம்கார்டுகள் பொருத்தும் வசதிகள் உள்ளது. இனி இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்

இரண்டுமே ஒரே டிஸ்ப்ளே அளவுதான்

இரண்டுமே ஒரே டிஸ்ப்ளே அளவுதான்

கூல்பேட் மெகா 3 மற்றும் நோட் 3S ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே 5.5 இன்ச் அளவில் 720P ஸ்க்ரீனில் கர்வ்ட் கண்ணாடியுடன் உள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களின் ஸ்க்ரீனும் கோர்னிங் கோரில்லா கிளாஸ் 3 டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டது.

ஹார்ட்வேர் எப்படி இருக்கும் தெரியுமா?

ஹார்ட்வேர் எப்படி இருக்கும் தெரியுமா?

கூல்பேட் மெகா 3 ஸ்மார்ட்போனில் 1.25GHz MediaTek MT6737 சிப்செட் அமைந்துள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் நோட் 3S ஸ்மார்ட்போன் 1.3GHz குவால்கொம் ஸ்னாப்டிராகன் 415 சிப்செட்டை கொண்டது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அதெல்லாம் சரி, கேமிராவை பற்றி சொல்லுங்கள்

அதெல்லாம் சரி, கேமிராவை பற்றி சொல்லுங்கள்

கூல்பேட் மெகா 3 ஸ்மார்ட்போனில் 8MP பின் கேமிரா LED பிளாஷ் வசதியுடன் உள்ளது. மேலும் அதே அளவுக்கு அதாவது 8MP செல்பி கேமிராவும் உள்ளதால் செல்பி எடுக்கவும், வீடியோ காலிங் பேசவும் வசதியாக இருக்கும்.

நோட் 3S ஸ்மார்ட்போனில் 13MP பின் கேமிராவும், 5MP செல்பி கேமிராவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி எதில் பவர் அதிகம்?

பேட்டரி எதில் பவர் அதிகம்?

கூல்பேட் மெகா 3 மற்றும் நோட் 3S ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் பேட்டரியும் பவர்புல்லாக இருப்பினும் கூல்பேட் மெகா 3 ஸ்மார்ட்போனில் 3050mAh பேட்டரியும் நோட் 3S ஸ்மார்ட்போனில் 2500 mAh பேட்டரியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஸ்மார்ட்போன்களும் இதில் ஒற்றுமை

இரண்டு ஸ்மார்ட்போன்களும் இதில் ஒற்றுமை

கூல்பேட் மெகா 3 மற்றும் நோட் 3S ஆகிய இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ வகையை சேர்ந்தது என்பதில் ஒரு ஒற்றுமை உள்ளது.

எல்லாம் ஓகே. விலை என்ன?

எல்லாம் ஓகே. விலை என்ன?

இவ்வளவு அருமையான வசதிகள் இருந்தும் நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் விலையில் தான் இந்த ஸ்மார்ட்போன்கள் உள்ளன. கூல்பேட் மெகா 3 ரூ.6,666 விலையிலும் கூல்பேட் நோட் 3S ரூ.6,999 விலையிலும் டிசம்பர் முதல் அமேசான் இந்தியாவில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Coolpad, today at an event held in India launched the Coolpad Mega 3 and Note 3S smartphones and priced them at Rs. 6,999 and Rs. 9,999 respectively. Both the smartphones will be on sale from December 7 exclusively on Amazon India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X