Home
Mobile

டூயல் கேமராவுடன் பட்ஜெட் விலையில் கூல்பேட் எம்3 அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமியும் இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கூல்பேட் நிறுவனம் புதிய கூல்பேட் எம்3 என்ற ஸ்மார்ட்போனை செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோனில் இடம்பெற்றுள்ள நாட்ச் டிஸ்பிளே
வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் கேமராவுடன் பட்ஜெட் விலையில் கூல்பேட்  எம்3 அறிமுகம்.!

கூல்பேட் எம்3 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கூல்பேட்  எம்3 :

கூல்பேட் எம்3 :

கூல்பேட் எம்3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.85-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1512 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக்:

மீடியாடெக்:

கூல்பேட் எம்3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6750 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமியும் இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கைரேகை சென்சார் போன்ற பல ஆதரவுகளும் உள்ளது என்று
தான் கூற வேண்டும்.

கேமரா:

கேமரா:

கூல்பேட் எம்3 ஸ்மார்ட்போன் பொதுவாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. பின்பு 13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது.

 விலை:

விலை:

கூல்பேட் எம்3 சாதனத்தில் 2800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.8,100-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Coolpad M3 with 5.85-inch notched display, AI face recognition unveiled: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X