6.36-இனச் டிஸ்பிளேவுடன் கூல்பேட் லேகசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
கூல்பேட் லேகசி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.36-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
கூல்பேட் நிறுவனம் தற்சமயம் பட்ஜெட் விலையில் புதிய கூல்பேட் லேகசி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஒரு சில ஆஃப்லைன் விற்பனை மையங்களில் மட்டுமே கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கூல்பேட் லேகசி ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
கூல்பேட் லேகசி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.36-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:
கூல்பேட் லேகசி சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி உள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

கேமரா:
கூல்பேட் லேகசி ஸ்மார்ட்போனில் 16எம்பி 10 5எம்பி டூயல் ரியர் கேமரா வசதி உள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி-விலை:
கூல்பேட் லேகசி சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொதுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.9,155-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications