புதிய சிடிஎம்ஏ மொபைல்கள்: கூல்பேட் அறிமுகம்

Posted By: Staff

புதிய சிடிஎம்ஏ மொபைல்கள்: கூல்பேட் அறிமுகம்
கூல்பேட் நிறுவனம் 3 புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

சிடிஎம்ஏ சிம் கார்டு கொண்ட இந்த மொபைல்கள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக விற்பனைக்கு வருகிறது. இதில், கூல்பேட் மற்றும் ரிலயன்ஸ் நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ்,டேட்டா ப்ளான் போன்ற வகையில் பல டிஸ்கவுன்ட் ஆஃபர் வசதிகள் கொடுக்கப்பட உள்ளன.

இதில் 800 எம்ஹெச்சட் பிராசஸர் மற்றும் 256 எம்பி ரேம் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. 3.5 இன்ச் டச் ஸ்கிரீன் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிடிஎம்ஏ ஹேண்செட்ஸ் பொதுவாக ரூ.3,500 மதிப்பு கொண்டதாக விற்பனைக்கு வருகின்றன. ஆனால் இந்த ஹேண்ட்செட்டில் மிட் ஹை என்ட் சிடிஎம்ஏ வசதியுடன் கூடியதாக உள்ளதால் விலை சற்று அதிகமாக இருக்கும்.

இந்நிறுவனம் ஜிஎஸ்எம் வசதி கொண்ட மொபைல்போன்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இதில் ஆன்ராய்டு 2.1 எக்லர் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஆன்ராய்டு எக்லர் பல விதமான ஆன்ராய்டு அப்பிலிக்கேஷன்களுக்கு சப்போர்ட் செய்கின்றது.

1.3 மெகா பிக்ஸெல் கேமிரா வசதியினால் எளிதாக படங்களும்,வீடியோக்களும் எடுக்க முடியும்.ஆனால் அந்த அளவு துல்லியமாக இருக்காது.

வாடிக்கையாளர்கள் அசந்து போகும் அளவுக்கு இதில் பேட்டரி அம்சம் உள்ளது.கம்ப்யூட்டரில் வயர்லெஸ் கனக்டிவிட்டியாகவும் இந்த 1எக்ஸ் மோடம் செயல்படுகிறது.

இதில் மைக்ரோ எஸ்டி கார்டு 4ஜிபி வரை கூடுதலாக்கிக்கொள்ளும் வசதியை பெற்றுள்ளது.

இதில் உள்ள மீடியாப்ளேயர் மிகவும் அற்புதமாக உள்ளது. எம்பி3, எம்பி4 பார்மெட்டுகளில் இசையை கேட்கும் வசதியை பெறமுடியும்.

900 எம்ஏஹெச் எல்ஐ இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள டபிள்யூஏபி பிரவ்ஸர் மூலம் இன்டர்நெட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருடு போனால் கண்டுபிடிக்க ஏதுவாக 'ஆன்டி-தெப்ட்' தொழில்நுட்பம் மூலம் ஹேண்ட்செட் செக்யூர்டு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட கூல்பேட் ஹேண்ட்செட்டுகள் ரிலையன்ஸ் வேர்ல்டு மற்றும் ரிலையன்ஸ் மொபைல் ஸ்டோர்களில் கிடைக்கும். கூல்பேட் அறிமுகம் செய்துள்ள மொபைல்போன்கள் ரூ.8,000 விலையில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய மற்ற இரண்டு ஹேண்ட்செட்களின் விலை உள்ளிட்ட விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot