21 எம்பி பாப் அப் செல்பி கேமரா,6 ஜிபி ரேம் உடன் கூல்பேட் கூல் 6: விலை ரூ.10,999 முதல்!

|

கூல்பேட் கூல் 6, இந்தியாவில் 21 எம்.பி பாப்-அப் செல்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களோடு அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.10,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன்

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன்

கூல்பேட் தனது புதிய மாடலான கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போனை ரூ.10,999 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 14 முதல் அமேசானில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூல்பேட் கூல் 5-ன் வாரிசாக கூல்பேட் கூல் 6 அறிமுகமாகியுள்ளது.

இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம்

இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம்

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. அது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியாகும். இது ப்ளூ மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு

6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு

கூல்பேட் கூல் 6 கிடைக்கும் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்ட் ரூ.10,999 மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு ரூ.12,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

கூல்பேட் கூல் 6 சிறப்பம்சங்கள்

கூல்பேட் கூல் 6 சிறப்பம்சங்கள்

கூல்பேட் கூல் 6 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.53 இன்ச் முழுஹெச்டி ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி70 ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கென பேஸ் அன்லாக் மற்றும் கைரேகை சென்சார் வசதி இதில் இருக்கிறது.

வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி?வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி?

கூல்பேட் கூல் 6 கேமரா

கூல்பேட் கூல் 6 கேமரா

கூல்பேட் கூல் 6 கேமராவை பொருத்தவரையில் இதில் டிரிபிள் ஏஐ கேமரா வசதி இருக்கிறது. அது நைட் மோட், எச்.டி.ஆர், யு.எச்.டி, ப்ரோ, பனோரமா போன்ற அம்சங்கள் இருக்கிறது. 48 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 2 மெகாபிக்சல் செகண்டரி ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவையாகும்.

முன்புற செல்பி கேமரா

முன்புற செல்பி கேமரா

முன்பக்க கேமராவை பொருத்தவரை இதில் 21 மெகாபிக்சல் AI ரைசிங் கேமரா வசதி உள்ளது. இது நைட் மோட், ஹெச்டிஆர், யுஹெச்டி ப்ரோ மோட், மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மற்றும் ப்ரீமியம் அம்சம்

ஸ்மார்ட் மற்றும் ப்ரீமியம் அம்சம்

இதுகுறித்து கூல்பேட் இந்தியாவின் ஆன்லைன் மார்க்கெட்டிங் மேனேஜர் ஹர்ஷ் ஷர்மா கூறுகையில், கூல் 5 மாடல் ஸ்மார்ட்போனின் வெற்றியையடுத்து அதன் வாரிசாக கூல் 6 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மற்றும் ப்ரீமியம் அம்சங்களுடன் கூல் 6 சந்தையில் வருகிறது. தங்களது மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக கூல்பேட் கூல் 6 இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Coolpad Launched its Coolpad Cool6 with 21 Mp Popup Selfie Camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X