Home
Mobile

ரிலையன்ஸ் கூல்பேட் டி-530 மற்றும் இன்டெகஸ் இன் 4370-ஒப்பீட்டு அலசல்

By Super
ரிலையன்ஸ் கூல்பேட் டி-530 மற்றும் இன்டெகஸ் இன் 4370-ஒப்பீட்டு அலசல்
மார்க்கெட்டில் பரபரக்கும் ரிலையன்ஸ் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள பட்ஜெட் விலை மொபைல்போன்கள் பற்றிய ஒப்பீட்டு அலசலை காணலாம். ரிலையன்ஸ் கூல்பேட் டி-530 மாடல் 94 கிராம் எடை கொண்டது. இன்டெக்ஸ் இன் 4370 கூல் மாடலோ 90 கிராம் எடை கொண்டது.

கூல்பேட் மாடலையும் விட சிறிது எடை குறைவாக உள்ளது. இதானல் கையில் வைத்திருப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். ரிலயன்ஸ் கூல்பேட் டி-530 ஹேண்செட் மைக்ரோஎஸ்டி கார்டு வசதி கொண்டது.இதில் 4 ஜிபி வரை மட்டுமே மெமரியை விரிவுபடுத்த முடியும்.

இன்டெக்ஸ் இன் கூல் 4370 மாடலில் மெமரி 32 ஜிபி வரை அதிகரிக்க மைக்ரோஎஸ்டி ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் கூல்பேட் மாடல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.5 இஞ்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் வசதியைக் கொண்டுள்ளது. இன்டெக்ஸ் இன்-4370 மாடல் 2.2 இஞ்ச் திரை கொண்டது. இந்த மாடலில் டச்ஸ்கிரீன் வசதி இல்லை.

கூல்பேட மாடலில் 2 மெகா பிக்ஸல் கேமரா வசதி உள்ளதால் சிறந்த, துல்லியான புகைப்படங்களைப் பெற முடியும். இதனால் டிஜிடல் சூம் மற்றும் வீடியோ ரிக்கார்டிங் வசதியையும் பெற முடியும். இன்டெக்ஸ் இன் மாடலில் 1.3 மெகாபிகஸல் கேமரா உள்ளது. ரிலையன்ஸ் கூல்பேட் மாடலை விட இன்டெக்ஸ் மாடலின் கேமரா பிக்ஸல் சற்று குறைவாகத் தெரிகிறது.

கூல்பேட் டி-530 ஹேண்ட்செட்டில் 1280 எம்ஏஎச் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதானால் 4 மணி நேர டாக் டைம் பெற முடியும். இன்டெக்ஸ் இன்-4370 மாடலில் கூல்பேட் பேட்டரியை போல் இரண்டு மாடங்கு அதிகமான பேட்டரி பவரை எந்த வித இடையூரும் இன்றி பெற முடியும். கூல் 4370 மாடலில் 3ஜி வசதி இல்லை.

ரிலையன்ஸ் மாடலில் 3ஜி காம்பாட்டிபிலிட்டி வசதி உள்ளது. அதோடு யூஎஸ்பி போர்ட் வி2.0 வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கூல் 4370 மொபைலிலும் யூஎஸ்பி வசதி உள்ளது. இன்டெக்ஸ் கூல் 4370 போனில் ஏ2டிபி புளூடூத் வசதி வழங்கப்பட்டுள்ளது. டி-530 மாடலில் சாதாரண புளூடூத் வசதி மட்டுமே உள்ளது. அதோடு ரிலையன்ஸின் டி-530 மாடலில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் டெக்னாலஜி வசதிகள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கூல் 4370 மாடலில் மீடியா ப்ளேயர் வசதியும் உள்ளது.

கூல்பேட் டி-530 மாடலின் விலை ரூ.7,500 என்றும் இன்டேக்ஸ் இன் ரூ.3,000 இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. அதிலும் இன்டெக்ஸ் மாடலின் விலை இன்னும் சற்று குறையலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X