பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் ப்ளே 7சி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த கூல்பேட் கூல் ப்ளே 7சி ஸ்மார்ட்போனில் 8எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5எம்பி செல்பீ கேமரா அமைப்பும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூல்பேட் நிறுவனம் கூல்பேட் கூல் ப்ளே 7சி என்ற ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் கூல்பேட் கூல் ப்ளே 7சி ஸ்மார்ட்போன் மாடல் சிவப்பு, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று கூல்பேட் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

கூல்பேட் கூல் ப்ளே 7சி:
கூல்பேட் கூல் ப்ளே 7சி ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720 x 1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மீடியாடெக்:
கூல்பேட் கூல் ப்ளே 7சி ஸ்மார்ட்போன் 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6730 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 4ஜிபி மற்றும் 64ஜிபி
உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இந்த கூல்பேட் கூல் ப்ளே 7சி ஸ்மார்ட்போனில் 8எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5எம்பி செல்பீ கேமரா அமைப்பும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் உள்ளது.

இணைப்பு ஆதரவுகள் :
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
3ஜிபி ரேம் கொண்ட கூல்பேட் கூல் ப்ளே 7சி ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,200-ஆக உள்ளது, அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,300-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications