13எம்பி டூயல் கேம்; 4060 எம்ஏஎச் பேட்டரியுடன் கூல்பேட் கூல் ப்ளே 6.!

|

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான கூல்பேட் ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று துபாயில் நடைபெறவிருக்கும் ஒரு அறிமுக நிகழ்வில் கூல்பேட் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

13எம்பி டூயல் கேம்; 4060 எம்ஏஎச் பேட்டரியுடன் கூல்பேட் கூல் ப்ளே 6.!

இந்த அறிமுக நிகழ்வையொட்டி. கூல்பேட் நிறுவனம் வெளியாகும் அதன் ஸ்மார்ட்போனிற்கான டீஸர்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி அன்று இந்தியாவிலும் கூல்பேட் கூல் ப்ளே 6 சாதனம் அறிமுகமாகும் என்பதும் இது சார்ந்த விளம்பர நிகழ்வு (லைவ் டூ பிளே என்ற பெயரில் ) ஆகஸ்ட் 6 முதல் 20 ஆகஸ்ட் வரை பேஸ்புக்கில் ஏற்கனவே நிறுவனம் மூலம் நடந்துகொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்கம் மற்றும் கருப்பு நிறம்

தங்கம் மற்றும் கருப்பு நிறம்

கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி சீனாவில் தங்கம் மற்றும் கருப்பு நிறம் விருப்பங்களில் 1499 யுவான் விலையில் இந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

சீனாவில் உள்ள விலை நிர்ணயத்தை மனதில் வைத்து பார்த்தால் இந்த சாதனம் இந்தியாவில் ஒரு பட்ஜெட் கருவியாக அறிமுகமாகுமென்று எதிர்பார்க்கிறோம். அதாவது சுமார் ரூ.8,947/- என்பதை சுற்றிய ஒரு விலை நிர்ணயத்தை பெறலாம்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மேலும் கூல் ப்ளே 6 ஆனது 5.5 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்) உள்ள-செல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது வடிவமைப்பை பொறுத்தமட்டில் இக்கருவி ஒரு பிரீமியம் மெட்டல் யூனிபாடியை கொண்டுள்ளது.

செயலி

செயலி

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 653 செயலி (குவாட் 1.95ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ72 + குவாட் 1.44ஜிகாஹெர்ட்ஸ் ஏ53) உடனான அட்ரெனோ 510 ஜிபியூ கொண்டு இயங்குகிறது.

ரேம் மற்றும் உள் சேமிப்பு

ரேம் மற்றும் உள் சேமிப்பு

மேலும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. உடன் இது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்க ஆதரவு கொண்ட 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பும் கொண்டுள்ளது.

கேமராக்கள்

கேமராக்கள்

இக்கருவியில் 13 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமராக்கள் உள்ளன. அதில் எப் / 2.0 துளை, பேஸ் டிடெக்ஷன் ஆட்டோபோகஸ் (PDAF), இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ் ஆகிய அம்சங்களும் அடங்கும். மறுபக்கம்,எப் / 2.2 துளை கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ வீடியோ அழைப்புகளுக்கான கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் 2560 மணி நேரம் காத்திருப்பு, 9 மணி நேர இணைய உலாவுதல், 8 மணி நேர வீடியோ காட்சி மற்றும் 6 மணி நேர தீவிர கேம் விளையாடல் ஆகியவைகளை வழங்கும் சக்திவாய்ந்த 4060 எம்ஏஎச் (நீக்க முடியாத) பேட்டரி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

ஸ்மார்ட்போன் பின்னால் கைரேகை சென்சார் ஒன்றும் உள்ளது. தவிர இது இரட்டை சிம், 4ஜி, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்கும் இது அளவீட்டில் 152 x 75.2 x 8.45 மிமீ மற்றும் 170 கிராம் எடை கொண்டுள்ளது

Best Mobiles in India

English summary
Coolpad Cool Play 6 teasers released ahead of launch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X