அமேசான் : 14,999 விலையில் கிடைக்கும் கூல்பேட் கூல் ப்ளே 6.!
கூல்பேட் நிறுவனம் அதன் புதிய கூல் ப்ளே 6 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 8.0 ஒஎடிஏ அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
கூல்பேட் நிறுவனம் அதன் புதிய கூல் ப்ளே 6 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 8.0 ஒஎடிஏ அப்டேட் செய்யப்பட்டுள்ளது, மேலும் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போனை 14,999 ரூபாய் விலையில் அமேசான் வலைதளத்தில் வாங்க முடியும்.
இந்த கூல்பேட் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 653 செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
கூல்பேட் கூல் ப்ளே 6 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:
கூல்பேட் கூல் ப்ளே 6 பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications