பட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் கூல்பேட் கூல் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் தனது கூல்பேட் கூல் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கூல்பேட் கூல் 5 ஸ்மார்ட்போன் டிஸ்பிளே
கூல்பேட் கூல் 5 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 1520 x 720பிக்சல் திர்மானம் மற்றும் மற்றும் 19:9 என்கிற திரைவிகிதம் அடிப்படையில்வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக உள்ளது.

கேமரா அம்சம்
கூல்பேட் கூல் 5 சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா +2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் 16எம்பி செல்பீ கேமரா, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ், என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சேமிப்பு மற்றும் விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கூல்பேட் கூல் 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. மேலும்இந்த சாதனம் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications