பட்ஜெட் விலையில் கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
கூல்பேட் நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் புதிய கூல்பேட் கூல் 3 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளதுஇ அதன் சிறப்பம்சங்களைப்பார்பபோம்

கூல்பேட் கூல் 3 பிளஸ் டிஸ்பிளே
கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.71-இன்ச் முழு எச் பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1520*720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆக்டா-கோர் ஹிலியோ ஏ22
இந்த ஸ்மார்ட்போனில் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஹிலியோ ஏ22 மென்பொருள் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பைஇயங்குதளம் கொண்டு கூல் 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூல்பேட் கூல் 3 பிளஸ் மெமரி
கூல்பேட் கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கூட இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் சிம் ஸ்லாட் வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கூல்பேட் கூல் 3 பிளஸ் கேமரா:
இக்கருவி 13எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதேபோன்று 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

பேட்டரி-விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோலட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக ரூ.5,999 விலையில் கூல் 3 ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications