Home
Mobile

வாங்குனா இப்படியொரு ஸ்மார்ட்போன் தான் வாங்கனும்.! தரமான கூல்பேட் கூல் 20எஸ் அறிமுகம்.!

கூல்பேட் நிறுவனம் தரமான கூல்பேட் கூல் 20எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான சிப்செட், அசலத்தலான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது கூல்பேட் கூல் 20எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

அருமையான டிஸ்பிளே

அருமையான டிஸ்பிளே

வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளேவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால், பார்க்கவே அருமையாக உள்ளது. குறிப்பாக இந்த புதிய சாதனம் 6.58-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட்

மீடியாடெக் Dimensity 700 சிப்செட்

கூல்பேட் கூல் 20எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Cool OS 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மென்பொருள் வசதியில் அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூல்பேட் கூல் 20எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்;ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

இந்த புதிய கூல்பேட் கூல் 20எஸ் சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ரா வைடு கேமரா வசதி இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்தஸ்மார்ட்போனின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

5ஜி, 4ஜி வோல்ட்இ,டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் ஃபயர்ஃபிளை பிளாக், மூன் ஷேடோ மற்றும் ப்ளூ நிறங்களில் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

கூல்பேட் கூல் 20எஸ் ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஜூன் 17-ம் தேதி

ஜூன் 17-ம் தேதி

அதேபோல் இந்த சாதனம் இப்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 17-ம் தேதி இந்த சாதனம் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Coolpad Cool 20s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X