கூலான டிஸைனுடன் புதிய Coolpad Cool 20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை இவ்வளவு மலிவா?

|

கூல்பேட் (Coolpad) நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் கூல்பேட் கூல் 20 (Coolpad Cool 20) என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மிரட்டலான டிஸைனுடன், கூலான தோற்றத்தில் மூன்று நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமே இந்த ஸ்மார்ட்போன் மாடல் நம்ப முடியாத மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு சிறப்பம்ச விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

புதிய கூல்பேட் கூல் 20 (Coolpad Cool 20) ஸ்மார்ட்போன்

புதிய கூல்பேட் கூல் 20 (Coolpad Cool 20) ஸ்மார்ட்போன்

கூல்பேட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய கூல்பேட் கூல் 20 (Coolpad Cool 20) ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது ஏர்ல் பிளாக், சீக்ரெட் சீ ப்ளூ மற்றும் கோகோ வைட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கூல்பேட் கூல் 20 ஸ்மார்ட்போன், 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நம்ப முடியாத மலிவு விலை எவ்வளவு தெரியுமா?

நம்ப முடியாத மலிவு விலை எவ்வளவு தெரியுமா?

இந்த புதிய Coolpad Cool 20 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வெறும் 699 யுவான் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது வெறும் ரூ. 7942 ஆகும். அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் 899 யுவான் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 10,215 ஆகும். இறுதியாக, இதன் ஹை-வேரியண்ட் மாடலான 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை 1,099 யுவானை நெருங்குகிறது. இது தோராயமாக ரூ.12488 ஆகும்.

இது செவ்வாய் கிரகம் இல்லை.. நம்முடைய பூமி தான்.! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த இடம் எங்கிருக்கிறது தெரியுமா?இது செவ்வாய் கிரகம் இல்லை.. நம்முடைய பூமி தான்.! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த இடம் எங்கிருக்கிறது தெரியுமா?

கூல்பேட் கூல் 20 விவரக்குறிப்புகள்

கூல்பேட் கூல் 20 விவரக்குறிப்புகள்

மிரட்டலான வடிவமைப்புடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் உடன் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம், 20: 9 விகிதம், 269 பிபி பிக்சல் அடர்த்தி மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் ஸ்டோரேஜ் அனுபவத்தை வழங்க மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் விருப்பத்துடன் வருகிறது.

கேமரா விபரம்

கேமரா விபரம்

கேமரா அம்சத்தைப் பொறுத்தவரையில், இந்த சாதனம் 48 மெகாபிக்சல்கள் கொண்ட பிரைமரி கேமரா மற்றும் போர்ட்ரெய்ட் சென்சார் கொண்ட பின்புற பேனலில் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. அதேபோல், முன்பக்கத்தைப் பொறுத்தவரை, இந்த புதிய கூல்பேட் கூல் 20 ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சார்ஜிங் வேகம் குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் இது வருகிறது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இது Android 11 OS ஐ அடிப்படையாகக் கொண்ட CoolOS இல் இயங்குகிறது.இணைப்பு அம்சங்களைப் பொறுத்தவரையில், புதிய கூல்பேட் கூல் 20 ஸ்மார்ட்போன் டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய அம்சங்களை ஆதரிக்கிறது. இது 164.3 x 75.66 x 8.65 மிமீ மற்றும் 199.6 கிராம் எடையைக் கொண்டுள்ளது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சாதனம் விரைவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையிலும் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலிவு விலை ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் அதிக மவுசு இருப்பதனால், இதை இந்தியச் சந்தையில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Coolpad Cool 20 with MediaTek Helio G80 chipset launched in Earl Black Secret Sea Blue and Cocoa White : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X