Home
Mobile

ஆளுக்கு ஒன்னு வாங்கலாம்.. ரூ.8600 போதும்.. 6.52-இன்ச் டிஸ்பிளே.. 48எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த போன்?

கூல்பேட் நிறுவனம் மலிவு விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கூல்பேட் நிறுவனம் சத்தமின்றி ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது கூல்பேட் கூல் 20 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது கூல்பேட் நிறுவனம். குறிப்பாக இந்த கூல்பேட் கூல் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது கூல்பேட் கூல் 20 பிளஸ் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

ஆளுக்கு ஒன்னு வாங்கலாம்.. 48எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த போன்?

கூல்பேட் கூல் 20 பிளஸ் அம்சங்கள் (Coolpad Cool 20+ Specifications): 6.52-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் வாட்டர் டிராப் (IPS LCD HD+ waterdrop) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது கூல்பேட் கூல் பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் 1600×720 பிக்சல்ஸ், ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் 89.2% மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (Mediatek Helio G85 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த கூல்பேட் கூல் 20 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கூல்ஓஎஸ் 2 ( CoolOS 2) சார்ந்த ஆண்ட்ராய்டு 11 (Android 11) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கூல்பேட் கூல் 20 பிளஸ் போன் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த கூல்பேட் கூல் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா + 0.3எம்பி போர்ரெயிட் பிளர் செகண்டரி கேமரா (portrait blur secondary camera) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த கூல்பேட் கூல் 20 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான கூல்பேட் போன்.

இதுதவிர எலஇடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த கூல்பேட் கூல் 20 பிளஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

ஆளுக்கு ஒன்னு வாங்கலாம்.. 48எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த போன்?

ஹைப்ரிட் டூயல் சிம், புளூடூத் 5.0, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய கூல்பேட் கூல் 20 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 180 கிராம் ஆகும்.

குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கூல்பேட் கூல் 20 பிளஸ் போனின் விலை 736 யுவான் (இந்திய ரூ.8,600). கம்மி விலையில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Coolpad Cool 20 Plus launched in China: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X