அமேசானில் கூல்பேட் ஸ்மார்ட்போன்களுக்கு விலைக் குறைப்பு.!
கூல்பேட் நோட் 5 ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப் 617 செயலி மூலம் இயங்குகிறது.!
கூல்பேட் நிறுவனம் தற்போது அதிரடியாக அதன் ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பு அறிவித்துள்ளது, மேலும் இந்த ஆபரை அமேசான் வலைதளத்தைப்பயன்படுத்தி பெறமுடியம். இந்த ஆபர் ஜூன் 12ஆம் தேதியிலிருந்து துவக்கம் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூல்பேட் கூல் 1 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டுள்ளது, இதன் டிஸ்பிளே பொறுத்தமட்டில் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே (1920-1080 வீடியோ பிக்சல் கொண்டவை) ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 செயலி, தற்போது இந்த ஸ்மாரட்போன் ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு, ரூ.9,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.
கூல்பேட் நோட் 5 ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப் 617 செயலி மூலம் இயங்குகிறது, மேலும் இவை 5.5 -இன்ச் முழு எச்டி டிஸ்பிளே (1920-1080)வீடியோ பிக்சல் கொண்டவை. இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டுள்ளது, இவற்றின் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 6.0, 4010எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இதனுள் அடக்கம். தற்போது இந்த ஸ்மாரட்போன் ரூ.3000 விலைகுறைக்கப்பட்டு, ரூ.11,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.
கூல்பேட் நோட் 5 லைட் ரியர்கேமரா 13மெகா பிக்சல் கொண்டுள்ளது, முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது, இதன் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 6.0, பல்வேறு இணைப்பு சாதனங்கள் இதனுள் அடக்கம். தற்போது அதன் விலை ரூ.9,999க்கு விறக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications