கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல்-ன் முழு அம்சங்களும் வெளியானது.!
இக்கருவியில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு 3520எம்ஏஎச் பேட்டரியை எதிர்நோக்கும் அதே நேரம் 3.5மிமீ ஆடியோ ஜாக்கை எதிர்பார்க்க முடியவில்லை.
கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் பற்றி துவக்கத்திலிருந்தே பல வகையான லீக்ஸ் தகவல்களை பெற்றுவந்தாலும், வருகிற அக்டோபர் 4-ஆ ம் தேதி கூகுள் நிறுவனம் அதன் இரண்டாவது தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள இந்நிலைப்பாட்டில் வெளியாகியுள்ள அம்சங்கள் சார்ந்த தகவல்கள் முக்கியாமானதாக கருதப்படுகிறது.

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டுள்ள்ள சமீபத்திய அறிக்கையானது, கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகள் மீது வெளிச்சம் போட்டுள்ளது. இந்த மூல ஆவணம் சுயாதீனமாக சரிபார்க்கப்பட்ட ஒரு ஆவணத்திலிருந்து பெறப்பட்டதாகத் தெரிகிறது. ஒருவேளை இந்த விவரக்குறிப்புகள் எல்லாம் உண்மையானதாக இருந்தால், அக்டோபர் 4-ஆம் தேதி அறிமுக நிகழ்வு வரை அம்சங்களுக்காக நாம காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் அம்சங்கள்
கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில், 1440பி தீர்மானம் கொண்ட ஒரு எட்ஜ்-டூ-எட்ஜ் வளைந்த க்யூஎச்டி டிஸ்பிளே இடம்பெறும் என்பது போல் தெரிகிறது. மேலும் இந்த டிஸ்பிளேவானது, வைட் கலர் வரம்பினை ஆதரிப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்
பிக்சல் 2 எக்ஸ்எல் திரையின் சரியான அளவை இந்த அறிக்கை வெளிப்படுத்தவில்லை, ஆனால் இது ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் 80% முதல் 85% வரை இருப்பதாகக் கூறப்படுகிறது. முந்தைய அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால், எல்ஜி நிறுவனத்தின் 5.99 அங்குல எஓல்இடி டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம்.

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி
வன்பொருள் துறையை பொறுத்தமட்டில், கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆனது 64ஜிபி / 128ஜிபி உள்ளடக்க சேமிப்பை கொண்ட ஒரு ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி-யை பயன்படுத்தலாம். மேலும் இந்த சாதனத்தில் பீச்சர் ஸ்டெல்லார் கேமராக்களில் பயன்படுத்தப்படும் அம்சமான ஓஐஎஸ் (OIS)இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எட்ஜ் சென்ஸ்
மேலும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் ஆனது இரண்டாம் தர தலைமுறை கைரேகை சென்சார், ஐபி67, கொண்டு வரலாம், இது தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு மற்றும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பை வழங்குகிறது. மற்றும் எச்டிசி யூ11-இல் காணப்படும் எட்ஜ் சென்ஸ் செயல்பாட்டை இந்த ஸ்மார்ட்போனில் காணலாம். எட்ஜ் சென்ஸ் செயல்பாடானது ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
பிக்சல் 2 எக்ஸ்எல் விளிம்பை அழுத்துவதன் மூலம், நீங்கள் கூகுள் அசிஸ்டென்ட்டை தொடங்கலாம் அல்லது அலாரத்தை ரத்து செய்யலாம். இக்கருவியில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு 3520எம்ஏஎச் பேட்டரியை எதிர்நோக்கும் அதே நேரம் 3.5மிமீ ஆடியோ ஜாக்கை எதிர்பார்க்க முடியவில்லை.

கூகுள் பிக்சல் 2 அம்சங்கள்
வெளியான அறிக்கையின்படி, பிக்சல் 2 சாதனத்தில் சில முக்கிய வேறுபாடுகளை எதிர்நோக்கலாம். பெரும்பாலும் பிக்சல் 2 எக்ஸ்எல்-ன் அம்சங்களை கொண்டுள்ள இக்கருவி பிரதான வேறுபாடாக, ழுஎச்டி1080பி தீர்மானம் கொண்ட ஒரு சிறிய அளவிலான திரை இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது மற்றும் இந்த சாதனத்தில் வைட் கலர் வரம்பு இருக்காது.

2700எம்ஏஎச்
வெளியான முந்தைய அறிக்கைகளின் அடிப்படையில், இந்த சாதனம் ஒரு சிறிய 4.97 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கலாம். பேட்டரித்திறனை பொறுத்தமட்டில் பிக்சல் 2 எக்ஸ்எல் சாதனத்தில் இருப்பதை விட குறைவான அதாவது 2700எம்ஏஎச் இருக்கலாமென கூறப்படுகிறது.

இலவச கூகுள் கிளவுட் சேமிப்பகம்
குறிப்புகள் தவிர, இந்த கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகிய இரண்டுமே வரம்பற்ற கூகுள் கிளவுட் சேமிப்பகத்தை 2023 வரை பயனர்களுக்கு இலவசமாக வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications