ப்பா.. தெறிக்க விடும் டிசைன்.. 8-இன்ச் டிஸ்பிளே.. ஒட்டுமொத்தமாக OnePlus V Fold போன்.. தரமா ரெடியாகி இருக்கு!
நேற்றுவரை ஒன்பிளஸ் ஃபோல்ட் (OnePlus Fold) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனானது, தற்போது ஒன்பிளஸ் வி ஃபோல்ட் (OnePlus V Fold) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு சேர்த்து ஒன்பிளஸ் வி ஃபோல்ட்டின் அட்டகாசமான வடிவமைப்பை (Design) வெளிப்படுத்தும் ரெண்டர் புகைப்படங்களும் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்களின் வழியாக என்னென்ன விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது? ஒன்பிளஸ் வி ஃபோல்ட் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எப்போது, என்ன விலைக்கு அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் ஃபோல்ட் அல்லது ஒன்பிளஸ் வி ஃபோல்ட் ஸ்மார்ட்போனானது வருகிற ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2023 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உருமாறியுள்ள ஒன்பிளஸ் ஃபோல்ட் பற்றி பல வகையான தகவல்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன.
அவைகளில், தற்போது வெளியாகியுள்ள ரெண்டர் புகைப்படங்கள் ஆனது மிகவும் முக்கியமான லீக்ஸ் தகவலாக பார்க்கப்படுகிறது. ஆன்லீக்ஸ் (OnLeaks) மற்றும் ஸ்மார்ட்பிரிக்ஸ் (SmartPrix) மூலம் பகிரப்பட்ட புகைப்படங்களின்படி, ஒன்பிளஸ் வி ஃபோல்ட் ஆனது கருப்பு நிற லெதர் பினிஷை (Black Leather Finish) கொண்டுள்ளது.
மேலும் ஒன்பிளஸ் வி ஃபோல்ட்டின் ரியர் பேனலின் (பின்பக்கத்தின்) நடுப்பகுதியில், ஒரு பெரிய, வட்டமான கேமரா செட்டப்பையும் (Circular Centre-aligned Camera Module) பார்க்க முடிகிறது. அதில் மூன்று கேமரா யூனிட்கள் உள்ளன மற்றும் அவைகளுடன் ஹாசல்பிளாட் (Hasselblad) லேபிளையும் தெளிவாக காணமுடிகிறது.
ஒன்பிளஸ் வி ஃபோல்ட்டின் மூன்று ரியர் கேமரா லென்ஸ்களில் ஒன்று - பெரிஸ்கோப் லென்ஸாக (Periscope Lens) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ராவை போலவே உயர்தரமான, மிகவும் நீளமான ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) அம்சங்களை வழங்கலாம். இதன் கேமரா செட்டப்பில் எல்இடி ஃபிளாஷ் ஒன்றையும் காண முடிகிறது.
இது தவிர்த்து, ஒன்பிளஸ் வி ஃபோல்ட்டின் ரெண்டர் புகைப்படங்கள் வழியாக அதன் வலது விளிம்பின் மேல் பக்கத்தில் அலெர்ட் ஸ்லைடரை (Alert Slider) காண முடிகிறது. அதனுடன் பவர் பட்டனுடன் (Power Button) ஒருங்கிணைகப்பட்ட கைரேகை சென்சாரையும் (Fingerprint sensor) பார்க்க முடிகிறது.
ஒட்டுமொத்த வடிவமைப்பை பொறுத்தவரை, ஒன்பிளஸ் வி ஃபோல்ட் ஆனது மிகவும் மெலிதான பெஸல்களை பெற்றுள்ளது. அதை இரண்டாக விரிக்கும்போது, பேனலின் மேல் இடது மூலையில் ஹோல்-பஞ்ச் ஸ்லாட் ஒன்று உள்ளது; அதில் இன்னர் செல்பீ கேமரா சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு செல்பீ கேமராவனது அவுட்டர் டிஸ்பிளேவின் மேல்புற மையத்தில் உள்ளது. இரண்டுமே 32எம்பி சென்சாராக இருக்கலாம்.
மற்ற கேமராக்களை பொறுத்தவரை, இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization - OIS) ஆதரவுடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா + 32 மெகாபிக்சல் பெரிஸ்கோபிக் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இதில் 8-இன்ச் க்யூஎச்டி+ ஓஎல்இடி ப்ரைமரி பேனல் மற்றும் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் வி ஃபோல்ட் ஆனது இந்தியாவில் ரூ.1,24,999 அறிமுகம் செய்யப்படலாம்.
Photo Courtesy: OnLeaks and SmartPrix


Click it and Unblock the Notifications