Home
Mobile

நோக்கியா சி-5 vs நோக்கியா-500 ஒப்பீடு

By Super
நோக்கியா சி-5 vs நோக்கியா-500 ஒப்பீடு
நோக்கியா நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமையை பெற்றிக்கும். அது தரம் என்பது ஊரறிந்த ரகசியம். இருப்பினும், போன் தேர்வு செய்யும்போது அதிலுள்ள சிறப்பம்சங்களை தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

இந்த நிலையில், விற்பனையில் முன்னிலை வகிக்கும் நோக்கியா சி-5 மற்றும் விரைவில் விற்பனைக்கு வரும் நோக்கியா- 500 போன்களின் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

நோக்கியா-500 போன் 3.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் கொண்டது. ஆனால், சி-5 2.2 இஞ்ச் டிஎப்டி ஸ்கிரீன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா-500 போன் 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

சி-5 போன் ஆன்லைனுக்கு உடனடியாக செல்லும் வசதியை பெற்றுள்ளது. மேலும், சமூக வலைதளங்களுக்குள் எளிதாக செல்லும் வகையிலும், புகைப்படங்களை எளிதில் ஆன்லைனில் பகிர்ந்துகொள்ளும் தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளது. இதில், 16 ஜிபி கூடுதல் மெமரி திறனை வழங்குவதால், புகைப்படங்கள் மற்றும் வீடியோ பைல்களை எளிதில் டவுண்லோடு செய்து சேமிக்க முடிகிறது. அதேவேளை, நோக்கியா-500 2 ஜிபி இன்டர்நெல் மெமரி வசதியை கொடுக்கிறது.

நோக்கியா சி-5ல் 5 டியூவல் ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்செல் கேமரா அருமையான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. வீடியோ காலிங் வசதிக்கு முகப்பு கேமராவும் இருக்கிறது. நோக்கியா 500 போனிலும், இதே 5 மெகாபிக்செல் கேமரா கொண்டிருக்கிறது. இது துல்லியமான வீடியோ பதிவை கொடுக்கிறது.

நோக்கியா-500 சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருப்பதால், சி-5வைவிட வேகத்தில் விரட்டுகிறது 500. ஆனால், புளூடூத் மற்றும் ப்ளாஷ் ப்ளேயர் உள்ளிட்ட அம்சங்களில் சி-5 நிறைவை தருகிறது.

நோக்கியா சி-5 போன் ரூ.8,000 விலையில் விற்பனையாகிறது. நோக்கியா-500 விலை குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால், இந்த போன் ரூ.9,456 முதல் ரூ.11,000 விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X