எதிர்பார்ப்பை தூண்டும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!

Posted By: Staff
எதிர்பார்ப்பை தூண்டும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!
சரவெடி போல் நோக்கியா நிறுவனம் அடுத்தடுத்து மொபைல்களை கொடுத்து கொண்டே இருக்கிறது. லுமியா வரிசையில் அடுத்து லுமியா-601 மற்றும் லுமியா-603 என்ற மொபைல்களை நோக்கியா வெளியிட உள்ளது. இந்த இரண்டு மொபைல்களுமே சிறந்த செயல்பாடுகளை கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

601 மற்றும் 603 மொபைல்கள் வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் தன்மை கொண்டது. லுமியா-603 மொபைல் சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், லுமியா-601 மொபைல் விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்கும். இரண்டுமே சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும்.

நோக்கியா லுமியா-603 மொபைல் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டது. ஆனால், நோக்கியா 601 லுமியா மொபைல் சற்று அதிகமான திரை வசதியை வழங்கும். லுமியா-601 மொபைல் போனில் 3.7 இஞ்ச் டபிள்யூவிஜிஏ தொடுதிரை வசதி கொண்டது.

நோக்கியா 603 மொபைலில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். லுமியா-601 மொபைல் 8 மெகா பிக்ஸல் கொண்டு அசத்தும். 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணை கொண்டு இயங்குகின்றது நோக்கியா 603 மொபைல். லுமியா-601 மொபைல் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம் 8255 பிராசஸர் உதவியுடன் செயல்படுகிறது.

இந்த இரண்டு மொபைல்களை பொறுத்த வரையில், எதுவுமே குறைந்த வசதி அல்ல. உயர்ந்த தொழில் நுட்பம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்று தாராளமாக சொல்லாம். இன்டர்நெட் வசதி கொண்ட மொபைலை வாங்குவதில் அனைத்து வாடிக்கையாளர்களுமே அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

இதை புரிந்துள்ள நோக்கியா நிறுவனம் இந்த இரண்டு மொபைல்களிலுமே வைஃபை தொழில் நுட்பத்தினை கொடுத்திருக்கிறது. ஒரு மொபைலில் புளூடூத் வசதியும் அவசியம் ஆகிவிட்டது. அதனால் இந்த மொபைல்களில் புளுடூத் வசதியையும் கொடுக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அனைத்து நிறுவனங்களும் பிரத்தியேக வசதிகளுடன் மொபைல்களை தயாரிக்கின்றது. இதை கவனத்தில் கொண்ட நோக்கியா நிறுவனம் இந்த ஸ்மார்ட மொபைல்களில் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதிய கொடுக்கவும் மறக்கவில்லை.

அடுத்து, முக்கியமாக பேட்டரி வசதி. லுமியா-601 மொபைலில் ரிமூவபுல் லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. லுமியா-601 மொபைலில் ஸ்டான்டர்டு லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 7 மணி நேரம் டாக் டைமையும், 490 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் கொடுக்கிறது. நோக்கியா லுமியா-603 மொபைலின் விலை ரூ.20,000 விலையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் லிமியா-601 மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot