சூப்பர் பட்ஜெட் விலையில் 3 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் கோமியோ.!
கோமியோ சி2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.
ஹாங்காங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் சூப்பர் பட்ஜெட் விலையில புதிய 3 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இப்போது வெளிவந்துள்ள இந்த கோமியோ சி1,சி2 மற்றும் எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல்கள் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
கோமியோ சி1,சி2 மற்றும் எஸ்1 ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது, மேலும் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும் என இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர் சஞ்சய் குமார் கலிரோனா தெரிவித்தார்.

கோமியோ சி2:
கோமியோ சி2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம்
இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. மேலும் 4ஜி வோல்ட், 3ஜிஇ வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றில்
இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா:
இந்த கோமியோ சி2 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள ரியர் கேமரா மற்றும் செல்பீ கேமரா 8மெகாபிக்சலை கொண்டுள்ளன, மேலும்
எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16ஜிபி மெமரி:
கோமியோ சி2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் 2ஜிபி ரேம்
மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கோமியோ எஸ்1:
கோமியோ எஸ்1 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா வசதி அதன்பின் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது, அதன்பின்
எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் வசதியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கோமியோ எஸ்1 டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்மு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின் கைரேகை சென்சார் போன்ற வசதிகள் இவற்றில் உள்ளது. 2700எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
கோமியோ சி1,சி2 மற்றும் எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல்கள் முறையே ரூ.5,999, ரூ.7,199 மற்றும் 8,999-என்ற விலை மதிப்பைகொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications