ரூ.7199/-க்கு 4000எம்ஏஎச், ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்ட கொமியோ சி2.!
இந்தியாவில் ரூ.7,199/- என்ற விலைமதிப்பை பெற்றுள்ள இந்த சாதனம் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள முக்கிய சில்லறை கடைகளில் கிடைக்கும்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய வரவான கொமியோ, ஒரு அசத்தலான சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கொமியோ சி2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதன் மூலம் இந்நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் போர்ட்டில் ஒரு புதிய உறுப்பினரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ரூ.7,199/- என்ற விலைமதிப்பை பெற்றுள்ள இந்த சாதனம் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள முக்கிய சில்லறை கடைகளில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் வலைத்தளமான ஸ்னாப்டில், ஃப்ளிப்கார்ட், அமேசான், ஷாப்ஸ்க்ளூஸ் மற்றும் பேடிம் ஆகியவைகளிலும் ஆன்லைனில் கிடைக்கும்.

5ஜிபி டேட்டா
ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டணி வைத்துள்ள இந்நிறுவனத்தின் கருவிகளுக்கு ப்ரூவ்.309/- அல்லது அதற்கும் மேற்பட்ட ரீசார்ஜ்களை நிகழ்த்துவோர்களுக்கு 5ஜிபி அளவிலான கூடுதல் 4ஜி டேட்டா கிடைக்கும்.

கூடுதல் உற்பத்தியாளர் உத்தரவாதம்
மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒரு ஆண்டு + 100 நாட்கள் கூடுதல் உற்பத்தியாளர் உத்தரவாதம் மற்றும் ஆறு மாதங்களுக்கு பிறகான ஒரு முறை இலவச திரை மாற்று உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

5.2 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே
சி2 ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை பொறுத்தமட்டில், கொமியோ சி2 ஆனது 1280 x 720 பிக்சல்கள் அளவிலான திரை தீர்மானம் கொண்ட ஒரு 5.2 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

மெமரி
2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்புடன், 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ,மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக மேலும் மெமரி விரிவாக்கப்படலாம்.

செல்பீ மற்றும் வீடியோ அழைப்பு
கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, முன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான கொமியோ யூஐ கொண்டு இயங்குகிறது மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் ப்ளூடூத், வைஃபை, இரட்டை சிம், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை ஆதரிக்கிறது.

ப்ரீஸர் மற்றும் க்ளோன்
இந்த சாதனம் ப்ரீஸர் மற்றும் க்ளோன் பயன்பாடுகளுடன் வருகிறது மற்றும் இது திருட்டு எதிர்ப்பு அம்சமும கொண்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையின் போது, கருவியின் சிம் சார்ந்த எச்சரிக்கைகள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் பகிரப்படும்.


Click it and Unblock the Notifications