Home
Mobile

அட்டகாசமான அம்சங்களுடன் ரூ.6000/-க்குள் பேஸ் அன்லாக்; அதிர்ந்துபோன ஆப்பிள்.!

ஒரு வலுவான ஆப்லைன் சந்தையை உருவாக்கும் முனைப்பின் கீழ் பணியாற்றி வரும் கொமியோ நிறுவனமானது, இன்று அதன் கொமியோ சி1 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது.

By Muthuraj

ஒரு வலுவான ஆப்லைன் சந்தையை உருவாக்கும் முனைப்பின் கீழ் பணியாற்றி வரும் கொமியோ நிறுவனமானது, இன்று அதன் கொமியோ சி1 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஆன்லைன் போர்ட்டல்கள் ஆன - ப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம்,ஸ் ஸ்னாப்டீல் மற்றும் ஷாப்க்ளூஸ் - முழுவதும் வாங்க கிடைக்க வேண்டும்.

ரூ.6000/-க்குள் பேஸ் அன்லாக்; அதிர்ந்துபோன ஆப்பிள்.!

கொமியோ சி1 ப்ரோ ஆனது மீடியாடெக் 6739 எஸ்ஓசி உடனான டூயல் 4ஜி மற்றும் வோல்ட் ஆதரவு கொண்டுள்ளது. இதுதான் இந்தியாவில் மிக மலிவான விலையில் கிடைக்கும் டூயல் 4ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெரியாதோற்கு, மீடியாடெக் 6739 எஸ்ஓசி ஆனது இந்திய சந்தையை நோக்கமாக கொண்டு கடந்த 2017 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

128 ஜிபி  வரை சேமிப்பு விரிவாக்க ஆதரவு.!

128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க ஆதரவு.!

இதை தவிர, இந்த ஸ்மார்ட்போன் வேறென்ன சுவாரசியமான அம்சங்களை கொண்டுள்ளது என்று பார்த்தால், 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் 720 x 1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. உடன் பாப் டச் மற்றும் ஸ்பிலிட் ஸ்கிரீன் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, சி1 ப்ரோ ஆனது ஒரு மீடியா டெக் MT6739 சிப்செட் வஉடனான 1.5 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயங்குகிறது. உடன் மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க ஆதரவையும் வழங்குகிறது.

2500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.!

2500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.!

இரட்டை சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் (பெட்டிக்கு வெளியே) ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொண்டு இயங்கும், இது பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் என்று உறுதியளிக்கிறது. உடன் வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளுடன் 4ஜி எல்டிஇ போன்ற அனைத்து அடிப்படை இணைப்பு விருப்பங்களையும் கொமியோ சி1 ப்ரோ வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 2500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

பனோரமா பயன்முறை, சைகைகள் ஆதரவு மற்றும் பல.!

பனோரமா பயன்முறை, சைகைகள் ஆதரவு மற்றும் பல.!

இதன் விலைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு அம்சமும் இருக்கிறது, அது பேஸ் அன்லாக் அம்சம் ஆகும். ஆமாம், கொமியோ சி1 ப்ரோ எனப்படும் 6கே பட்ஜெட் ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லாக் அம்சம் இருக்கிறது, ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-க்கு நன்றி. கேமராதுறையை பொறுத்தவரை, பின்புறத்தில் ஒரு 8 எம்பி ரியர் கேமரா மற்றும் முன்பக்கத்தில் ஒரு 5 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இதன் கேமரா பயன்பாடானது பனோரமா பயன்முறை, சைகைகள் ஆதரவு மற்றும் பல அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

கொமியோ சி1 ப்ரோ விலை மற்றும் கிடைக்கும் தன்மை.!

கொமியோ சி1 ப்ரோ விலை மற்றும் கிடைக்கும் தன்மை.!

மூன்று வண்ண விருப்பங்கலின் கீழ் - உலோக சாம்பல், ராயல் பிளாக், மற்றும் சன்ரைஸ் தங்கம் - வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,599/- ஆகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, இது ஆன்லைன் விற்பனையை ,மட்டுமே சந்திக்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். ஒரு ஆண்டு மற்றும் 100 நாட்கள் உத்தரவாதம், ஒரு முறை திரை மாற்று உத்தரவாதம் மற்றும் 30 நாள் மாற்றுடன் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் மீதான எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 40% தள்ளுபடி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Comio C1 Pro is the Cheapest Smartphone With Dual 4G Support in India, Priced at Rs 5,599. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X