மிரட்டலான கலர்ஓஎஸ் 7 பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள் இதுதான்!

|

சமீபத்தில் வெளியான ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுடன் புதிய கலர்ஓஎஸ் 7 (ColorOS 7) வெர்ஷனை ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கலர்ஓஎஸ் 7 வெர்ஷன் இன்பினைட் டிசைன் கான்செப்ட் (Infinite Design concept) என்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. கண் சோர்வை குறைத்து பயனர்களுக்கு மிகவும் வசதியான வண்ண அமைப்பை வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

ஓப்போ ரெனோ 10x ஜூம்

ஓப்போ ரெனோ 10x ஜூம்

ஓப்போ ரெனோ 10x ஜூம் ஸ்மார்ட்போனின் கலர்ஓஎஸ் 7 வெர்ஷனை சமீபத்தில் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இதில் மாற்றப்பட்டுள்ள புதிய ஆண்ட்ராய்டு ஸ்கின்கள், ஐகான்கள் மற்றும் பல புதிய சேவைகள் என்ன என்பதைப் பார்க்கலாம். புதிய கலர்ஓஎஸ் 7 ஆனது ஒரு புதிய விஷுவல் வடிவமைப்புடன் களமிறக்கப்பட்டுள்ளது.

கலர்ஓஎஸ் 7 வடிவமைப்பு

கலர்ஓஎஸ் 7 வடிவமைப்பு

புதிய கலர்ஓஎஸ் 7 வெர்ஷன் எளிய பார்டர் இல்லாத விசுவல் தோற்றம் மற்றும் இலகுவாக எளிமையான மிருதுவான எல்லையற்ற அணுகுமுறை வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்பினைட் டிசைன் மூலம் பொதுவான ஸ்வைப்பிங், டாப்பிங் மற்றும் ஸ்கிரோலிங் போன்ற முக்கிய அம்சங்களின் பயன்பாட்டை நவீனப்படுத்தி மேம்படுத்தியுள்ளனர்.


ஒட்டுமொத்த UI இன் தோற்றத்தை மாற்றியதோடு, எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத அட்டகாசமான ஓப்போ சான்ஸ் ஃபோன்ட(Oppo Sans Font) டிசைனையும் மேம்படுத்தியுள்ளது. இதுவரை எந்த ஆண்ட்ராய்டு போனிலும் இல்லாத அட்டகாசமான ஃபோன்ட வகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஹாப்டிக்ஸ் மற்றும் சிறந்த தொடு திரை அனுபவம்

சிறந்த ஹாப்டிக்ஸ் மற்றும் சிறந்த தொடு திரை அனுபவம்

கலர்ஓஎஸ் 7 ஆதரவு சாதனத்தின் ஹாப்டிக்ஸ் அனுபவத்தை 8 பயன்பாட்டுடன் மேம்படுத்தியுள்ளது. போனின் கீபோர்டு, கால்குலேட்டர், திசைகாட்டி, ஆன்-ஆஃப் சுவிட்சுகள், ஸ்கிரீன்-ஆஃப் கேஸ்டர்கள் (gestures) மற்றும் பலவற்றை உள்ளடக்கிய எட்டு வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கிய UI இணக்கத்துடன் முழுவதுமாக செயல்படுகிறது.

அனிமேஷன்கள் மற்றும் புதிய சவுண்ட் எபக்ட்ஸ்

அனிமேஷன்கள் மற்றும் புதிய சவுண்ட் எபக்ட்ஸ்

புதிய கலர்ஓஎஸ் 7 அப்டேட், இயற்பியல் அடிப்படையிலான அனிமேஷன்களைப் பயன்படுத்துகிறது, இது அடிப்படை UI இடைவினைகளை ஆழமாகவும் யதார்த்தமாகவும் மாற்றுகிறது. கலர்ஓஎஸ் 7 வானிலை விட்ஜெட்டும் நிகழ் நேர வானிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியே நீங்கள் உணரும் வானிலையை, உங்கள் தொலைபேசியின் காட்சியில் தோன்றும் படி உருவாகியுள்ளது. சார்ஜிங் அனிமேஷன் கூட அழகாக மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் மெல்லிசையான அலாரம் டோன்கள் போன்றவற்றுடன் டாகில் சுவிட்ச், டேப், கிளிக்குகள், ஸ்லைடுகள், ஃபைல் நீக்கம், கால்குலேட்டர் கீபோர்டு சவுண்ட், திசைகாட்டி சுட்டிக்காட்டி சவுண்ட் மற்றும் நோட்டிபிகேஷன் சவுண்ட்களும் எளிமைப்படுத்தப்பட்டு காதுகளுக்கு மிகவும் இனிமையானவையாக மாற்றப்பட்டுள்ளது.

எளிமையான பயன்பாடு

எளிமையான பயன்பாடு

கலர்ஓஎஸ் 7 ஆதரவு சாதனங்களைப் பயன்படுத்தும் போது எளிமையான உணர்வு இருக்கிறது. எங்கள் ரெனோ 10 எக்ஸ் ஜூம் யூனிட்டின் வேகமும் செயலும் புதிய புதுப்பித்தலுக்குப் பிறகு பல மடங்கு மேம்பட்டுள்ளன. புதிய UI ஒரு கை பயன்முறையில் உகந்ததாக உள்ளது. வசதியான ஒன் ஹாண்டட் மோடு எளிதாக்க பாஸ்வோர்ட் திறப்பின் கிராஃபிக் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

'ஸ்மார்ட் ஸ்லைடுபார்' செயல்பாட்டைச் செம்மைப்படுத்தியுள்ளது. ஸ்ப்ளிட் ஸ்கிரீன் பயன்முறையில் திறக்க பயனர்கள் ஸ்லைடுபாறை பயன்படுத்தலாம். கலர்ஓஎஸ் 7, திரை பதிவுக்கு இடைநிறுத்தச் செயல்பாட்டைக் கொண்டுவருகிறது, இது பயனரின் பயன்பாட்டை மிகவும் எளிதாக்கியுள்ளது.

புதிய நாவிகேஷன் கேஸ்டர்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட் முறைகள்

புதிய நாவிகேஷன் கேஸ்டர்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட் முறைகள்

புதிதாகச் சேர்க்கப்பட்ட நாவிகேஷன் கேஸ்டர்கள் UI முழுவதும் கேஸ்டர் மூலம் பயன்படுத்த எளிதாக்குகின்றது. நீங்கள் திரும்பிச் செல்ல கீழே எந்த மூலையிலிருந்தும் ஸ்வைப் செய்யலாம், ஹாம் ஸ்கிரீன் செல்ல கீழே மையத்திலிருந்து ஸ்வைப் செய்தால் போதும், ஸ்வைப் அப் செய்து ஹோல்டு செய்து சமீபத்திய பணியைக் காண முடியும். உங்கள் வசதிக்கு ஏற்ப ஸ்வைப் பேக் நிலையைத் தனிப்பயனாக்க கலர்ஓஎஸ் 7 உங்களை அனுமதிக்கிறது.

3 விரல் ஸ்கிரீன்ஷாட் பயன்முறையையும் கொண்டுள்ளது. ஸ்கிரீன்ஷாட்டை விரைவாகப் பிடிக்க நீங்கள் மூன்று விரல்களால் கீழே ஸ்வைப் செய்யலாம், அதேபோல் கீழே ஸ்வைப் செய்வதன் மூலம் தொடர்புகளுடன் நேரடியாகப் ஷேர் செய்து பகிரலாம். குறிப்பிட்ட பகுதிகளின் ஸ்கிரீன் ஷாட்டை படம்பிடிக்க 3 விரல்களால் ஸ்வைப் செய்யப்பட்ட பகுதியின் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க நீண்ட அழுத்தத்துடன் நிறுத்தவும்.

கலர்ஓஎஸ் 7 விசுவல் மேம்பாடுகள்

கலர்ஓஎஸ் 7 விசுவல் மேம்பாடுகள்

கலர்ஓஎஸ் 7,'டார்க் மோட்' ஐ சேர்க்கிறது, இது பார்வைக்கு ஈர்க்கும், மின்நுகர்வை குறைக்கிறது மற்றும் சுற்றுப்புற விளக்குகள் இல்லாத நிலையில் தொலைப்பேசியைப் பயன்படுத்தும் போது கண்களைப் பாதுகாக்கிறது. கலர்ஓஎஸ் 7 இல் உள்ள டார்க் மோட் பயன்முறை UI முழுவதும் செயல்படுகிறது மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற பல மூன்றாம் தரப்பு பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது, பார்வைக் குறைபாடுள்ள பயனர்களுக்குப் பயனர் அனுபவத்தை மேம்படுத்த கலர்ஓஎஸ் 7 வண்ண அணுகல் பயன்முறையையும் கொண்டு வந்துள்ளது.

புதிய வால்பேப்பர்

புதிய வால்பேப்பர்

கலர்ஓஎஸ் 7, புதிய லைவ் வால்பேப்பர்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஹவா மஹால் லைவ் வால்பேப்பரை வண்ணங்கள் மற்றும் அனிமேஷன்களை நேரம் மற்றும் தொடு தொடர்புகளுடன் மாற்றுகிறது. விரல் தொடுதலுடன் வண்ண நெருப்புகளை காட்டும் ஆள்-பிளாக் லைவ் வால்பேப்பர் ஒரு கலை படைப்பு. இது தவிர கலர்ஓஎஸ் 7, பல நிலையான வால்பேப்பர்களையும் கொண்டுவருகிறது, இது உங்கள் தொலைபேசியின் முகப்புத் திரைக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

கலர்ஓஎஸ் 7 செயல்திறன் பூஸ்ட்

கலர்ஓஎஸ் 7 செயல்திறன் பூஸ்ட்

ரெனோ 10 எக்ஸ் ஜூம் ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்கமுடியும். புதிய புதுப்பித்தலுக்குப் பிறகு திரையின் டச் ரெஸ்பான்ஸ் பல மடங்கு மேம்பட்டுள்ளது. மிரட்டலான அதிரடி கேம்களை விளையாட்டுகையில் சில செயல்களைச் செய்யும்போது காட்சி செயல்திறன் முன்பை விட இப்போது மிகவும் விரைவாக இருக்கிறது. அதேபோல் மல்டி டாஸ்கிங் போன்ற செயல்திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உகந்த CPU திட்டமிடல் மெக்கானிசத்துடன், நீங்கள் இப்போது கேம்களை மிக வேகமாக லான்ச் செய்துகொள்ளலாம். நீங்கள் விளையாட்டுக்கு நடுவில் இருக்கும்போதும் கூட, கலர்ஓஎஸ் 7 ஸ்ப்ளிட் ஸ்கிரீன் அம்சத்துடன் (ஆட்டோ பதில்களுடன்) கால்களுக்கு பதிலளிக்க உங்களை அனுமதிக்கிறது.

கலர்ஓஎஸ் 7 கிடைக்கும் மொபைல்கள்

கலர்ஓஎஸ் 7 கிடைக்கும் மொபைல்கள்

கலர்ஓஎஸ் 7 ஏற்கனவே ரெனோ சீரிஸ் மற்றும் ஓப்போ எஃப் 11 சீரிஸ் சாதனங்களுக்காக முறையே ரெனோ 10 எக்ஸ் ஜூம், ரெனோ, எஃப் 11, எஃப் 11 புரோ மற்றும் எஃப் 11 புரோ மார்வெலின் அவென்ஜர்ஸ் லிமிடெட் பதிப்பு உள்ளிட்டவற்றில் கிடைக்கிறது. இது OPPO Find X சீரிஸ், ரெனோ 2 எஃப், ரெனோ இசட், ஆர் 17, ஆர் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் 17 ப்ரோ, ரெனோ 2 இசட் மற்றும் ஏ9 ஆகிய போனில் 2020 முதல் காலாண்டில் கிடைக்கும்.

உங்கள் ஓப்போ சாதனத்தை கலர்ஓஎஸ் 7-க்கு மேம்படுத்துவது எப்படி?

உங்கள் ஓப்போ சாதனத்தை கலர்ஓஎஸ் 7-க்கு மேம்படுத்துவது எப்படி?

கலர்ஓஎஸ் 7 இன் அம்சங்கள் மற்றும் செயல்திறன் அம்சங்களைப் பற்றி இப்போது நீங்கள் நன்கு அறிந்திருக்கும்போது, உங்கள் சாதனத்தை சமீபத்திய மென்பொருளுக்கு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் OPPO ரெனோ, ரெனோ 10 எக்ஸ் ஜூம், எஃப் 11, எஃப் 11 புரோ அல்லது எஃப் 11 ப்ரோ மார்வெலின் அவெஞ்சர் பதிப்பு சாதனம் வைத்திருந்தால், புதிய மென்பொருள் புதுப்பிப்புக்கான அறிவிப்பை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.

அப்படி அறிவிப்பு எதுவும் வராத நிலையில், தொலைபேசியின் 'About' பகுதிக்குச் சென்று 'Software Update' என்பதைச் கிளிக் செய்யுங்கள். உங்கள் சாதனம் குறைந்தது 80% சார்ஜ் உடன் இருக்க வேண்டும். அதேபோல் அப்டேட்-ஐ நிறுவுவதற்கும், இன்ஸ்டால் செய்வதற்கும் குறைந்தது 3 ஜிபி இலவச சேமிப்பிடத்தைக் கொண்டிருக்க வேண்டும். மேற்கூறிய பட்டியலிலிருந்து பெயர் இல்லாத பிற ஓப்போ சாதனங்களை வைத்திருக்கும் பயனர்களுக்கு, சாதனங்களுக்கான அப்டேட்-ஐ நிறுவனம் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
ColorOS 7: Most Refined And Intuitive Android Skin For Smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X