வெறும் ரூ.12,000 க்கு ஐபோன் லுக்.. டிஸ்பிளே, கேமரா, பேட்டரினு எல்லாமே டாப்பு.. ஆகஸ்ட் 1 அறிமுகம்.. என்ன மாடல்?
வெறும் ரூ.12,000 பட்ஜெட்டில், ஆப்பிள் ஐபோன் (Apple iPhone) போன்ற லுக்கில் உள்ள இந்த ஸ்மார்ட்போனின் டிஸைன் வேண்டுமென்றால் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் போகலாம்.. ஆனால் இவ்வளவு கம்மியான விலைக்கு இது கொண்டுள்ள தரமான அம்சங்கள் நிச்சயம் உங்கள் கவனத்தை ஈர்க்கும்.
நாம் இங்கே பேசுவது சியோமி (Xiaomi) நிறுவனத்தின் ரெட்மி 12 (Redmi 12) ஸ்மார்ட்போனை பற்றித்தான். வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த மாடல் பிரீமியம் வடிவமைப்பை கொண்ட பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஆகஸ்ட் 1 அறிமுகத்திற்கு முன்னதாக, ரெட்மி பிராண்ட் ஆனது ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன் ஒன்றை டீஸ் செய்துள்ளது. ரெட்மி நிறுவனம் இதை மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Silver) என்று அழைக்கிறது, இதுவொரு கலர் சேஞ்சிங் (Color-Changing) வேரியண்ட் ஆகும்.
அதாவது லைட்டிங் ஆங்கிளுக்கு ஏற்றவாறு சில்வர், பிங்க் மற்றும் ப்ளூ நிறங்களுக்கு இடையில் மாறும். கிரிஸ்டல் கிளாஸ் (Crystal Glass) என்றும் அழைக்கப்படும் இந்த வடிவமைப்பின் மூலம் ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கிளாஸ் பேனல் இடம்பெறும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.
அதுமட்டுல்ல - டீஸர் புகைப்படத்தில் காணப்படுவது போலவே - ரெட்மி 12-வின் பேக் பேனலில் ஐபோன்களில் இருப்பது போன்ற ட்ரிபிள்-கேமரா செட்டப்பும் இடம்பெறும். டக்கென்று பார்க்கும் போதும், ரெட்மி 12 ஆனது பெரிய கேமரா ஐலேண்ட் மற்றும் கேமரா பம்ப் எதுவும் இல்லாத ஒரு ஐபோனை போலவே தான் இருக்கிறது,
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 X 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் செல்பீ ஷூட்டருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடனான 6.79-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (MediaTek Helio G88 12nm) சிப்செட் மூலம் இயக்கப்படலாம்
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 4ஜிபி / 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யலாம். இதில் மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவும் இருக்கும். ரெட்மி 12 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ 14 (அவுட் ஆஃப் பாக்ஸ்) கொண்டு இயக்கப்படலாம்
கேமராக்களைப் பொறுத்தவரை, இது எஃப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் 8எம்பி கேமரா இடம்பெறலாம்.
ரெட்மி 12 ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 4ஜிபி / 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யலாம். இதில் மைக்ரோ எஸ்டி கார்டிற்கான ஆதரவும் இருக்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிடப்படி இது ரூ.12,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








