6.4-இன்ச் டிஸ்பிளே, 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. பளபளக்கும் கோகோ கோலா போன்? என்ன விலை?
"சார்.. என்ன இந்த பக்கம்? உங்களுக்கு இங்கே என்ன வேலை?" என்று கேட்கும்படியான காரியத்தை செய்ய உள்ளது - கோகோ கோலா நிறுவனம். அட ஆமாங்க.. கூடிய விரைவில் கோகோ கோலா பிராண்டின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் (Coca Cola Smartphone) அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது!

வெறும் தகவல் மட்டுமல்ல.. ஆதாரமும் வெளியாகி உள்ளது!
உலகின் மிகவும் பிரபலமான குளிர்பான பிராண்ட்களில் ஒன்றான கோகோ கோலா, ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்குகிறது என்கிற தகவலோடு சேர்த்து, கோகோ கோலாவின் புதிய ஸ்மார்ட்போனின் டிசைனை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்றும் ஆன்லைனில் வெளியாகி உள்ளது!
ஆகவே இந்த தகவலை ஒரு போலியான தகவல் என்று கூறி கடந்து விட முடியாது!
ஆன்லைனில் வெளியான புகைப்படத்தின் படி, கோகோ கோலா ஸ்மார்ட்போன் ஆனது "மிகவும் பளபளப்பான" சிவப்பு நிறத்தில் உள்ளது மற்றும் அதன் பேக் பேனலில் கோகோ கோலா என்கிற பிராண்ட் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
அண்ணே.. இது Coco Cola Phone இல்ல.. Realme போன்!
பிரபல டிப்ஸ்டர் ஆன முகுல் ஷர்மா வழியாக வெளியான இந்த புகைப்படத்தை "உற்றுநோக்கிய" சிலர், இது கோகோ கோலா ஸ்மார்ட்போன் அல்ல, இதுவொரு ரியல்மி ஸ்மார்ட்போன் என்று கூறி வருகின்றனர்.
ஏனென்றால் கோகோ கோலா ஸ்மார்ட்போனின் டிசைன் ஆனது ரியல்மி 10 ஸ்மார்ட்போனுடன் 99% ஒற்றுப்போகிறது.

இதன் மூலம் கோகோ கோலா நிறுவனமும், ரியல்மியும் கூட்டு சேரலாம் என்கிற யூகங்களும் கிளம்பி உள்ளன. அந்த யூகங்களுக்கு வலு சேர்க்கும்படி ரியல்மி நிறுவனமும் ஒரு வேலையை பார்த்துள்ளது!
ColaPhone-ஐ ஃபாலோ செய்யும் Realme!
ட்விட்டரில் கோலாபோன் (ColaPhone) என்கிற பெயரில் ஒரு அக்கவுண்ட் உள்ளது. அது கோகோ கோலா நிறுவனத்தை சேர்ந்த ட்விட்டர் அக்கவுண்ட்டாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஏனென்றால் கோலாபோன் என்கிற ட்விட்டர் அக்கவுண்ட்டை ரியல்மி நிறுவனம் ஃபாலோ செய்கிறது.
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கோலாபோன் அக்கவுண்ட்டை ரியல்மி மட்டுமல்ல, சாம்சங் (Samsung), நத்திங் போன் (Nothing Phone), ஆப்பிள் (Apple), சியோமி (Xiaomi), ஒப்போ (Oppo), ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் ஹூவாய் (Huawei) போன்ற நிறுவனங்களும் ஃபாலோ செய்கிறது. மேலும் இந்த எட்டு நிறுவனங்களையும் கோலாபோனும் ஃபாலோ செய்கிறது!
Coca Cola Phone-ல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
கோகோ கோலா ஸ்மார்ட்போன் ஆனது உண்மையிலேயே ரியல்மி 10 (Realme 10) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருந்தால் (அதாவது வேறு பெயரில் அறிமுகமாகும் ஒரே போன் ஆக இருந்தால்) கோகோ-கோலா ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்பிளே இடம்பெறும்!
அதுமட்டுமின்றி 90Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட், 50 மெகாபிக்சல் டூயல் கேமரா செட்டப், 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களையும் பேக் செய்யும்!
ColaPhone-ன் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?
ஒருவேளை கோகோ கோலா ஸ்மார்ட்போன் ஆனது உண்மையிலேயே ரியல்மி 10 மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருந்தால், அது ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலையோடு ஒற்றுப்போகலாம்.

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.13,999 ஆகும்! ஆக கோகோ கோலா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை!


Click it and Unblock the Notifications








