Home
Mobile

Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!

கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா (Coca Cola) அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அது கோலா போன் (Cola Phone) என்கிற பிராண்டின் கீழ் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியானது.

Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!

ஆரம்பத்தில் இதுவொரு போலியான தகவலாக இருக்குமென்று நம்பப்பட்டது. இருப்பினும் தற்போது - கோகோ கோலா ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையின் ஹாட்-டாபிக் ஆக மாறி உள்ளது!

டிவிஸ்ட் வைத்த ரியல்மி!

கோகோ கோலா ஸ்மார்ட்போன் இப்படித்தான் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படமானது, அது ரியல்மி 10 (Realme 10) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் எடிஷன் (Rebranded Version) ஆக இருக்கும் என்கிற யூகத்தை கிளப்பி இருந்தது.

அதன் விளைவாக, கோகோ கோலா நிறுவனமும், ரியல்மி நிறுவனமும் கூட்டு சேர்ந்துள்ளன என்கிற பேச்சுகளும் அடிபட்டன. இதற்கிடையில் ரியல்மி நிறுவனம் ஒரு புதிய டிவிஸ்ட்டை முன்வைத்துள்ளது.

அதென்ன டிவிஸ்ட்?

கோகோ கோலா ஸ்மார்ட்போன், ரியல்மி நிறுவனத்தின் ஒரு ரீபிராண்டட் எடிஷனாக இல்லமால், ஒரு ஸ்பெஷல் எடிஷனாக (Special Edition) இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!

அதாவது குளிர்பான நிறுவனமான கோகோ கோலா ஸ்மார்ட்போன் தொழிலுக்குள் இறங்கவில்லை; மாறாக ரியல்மி நிறுவனம் தான் கோகோ-கோலாவை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் கீழ் அல்லது வேறு எதோ ஒரு காரணத்தின் கீழ் ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது போல் தெரிகிறது!

இன்னொரு டிவிஸ்ட்டும் உள்ளது!

கோகோ கோலா ஸ்மார்ட்போன், முதலில் ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் எடிஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது - ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

ஏனென்றால், ரியல்மி நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் ஆன மாதவ் ஷெத் (Madhav Sheth), ட்விட்டர் வழியாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஹைப்பர்ஸ்பேஸ் கோல்ட் கலரில் வாங்க கிடைக்கும் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் உள்ளது மற்றும் அதன் பேக் பேனலில் கோகோ-கோலா டின் பாட்டிலின் பிரதிபலிப்பை தெளிவாக பார்க்க முடிகிறது.

Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!

ஆக இந்திய மொபைல் சந்தையில் பரபரப்பை கிளப்பிய கோகோ கோலா ஸ்மார்ட்போன் உண்மையில் ரியல்மி 10 ப்ரோவின் ஸ்பெஷல் எடிஷனாகத்தான் இருக்கும் என்பது "கிட்டத்தட்ட" உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Coco-Cola போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

கண்டிப்பாக கோகோ கோலாவால் ஈர்க்கப்பட்ட ஸ்பெஷல் வால்பேப்பர்கள், தீம்கள் அல்லது ரிங்டோன்களை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, பேக் பேனலில் கோகோ கோலா பிராண்டிங்கை வெளிப்படுத்தும் டிசைன் நிச்சயம் இடம்பெறும்!

ஆன்லைனில் லீக் ஆன புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, கோகோ கோலா ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பளபளப்பான டிசைனும் அதில் கோகோ கோலா லோகோவும் உள்ளது.

அது தவிர்த்து மீதமுள்ள எல்லாமே ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனும் ஒற்றுப்போகிறது. ஆக மேலோட்டமான மாற்றங்களை தவிர்த்து, உள்ளிருக்கும் அம்சங்கள் எல்லாமே ரியல்மி 10 ப்ரோவுடன் ஒற்றுப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Realme 10 Pro-வின் முக்கிய அம்சங்கள்:

எல்லாமே எதிர்பார்க்கப்பட்டபடி நடந்தால், கோகோ கோலா ஸ்மார்ட்போனில் ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடலில் உள்ள சில முக்கிய அம்சங்ககள் இடம்பெறலாம்.

Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!

அதாவது 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 108எம்பி ட்ரிபிள்-ரியர் கேமரா செட்டப், ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் இடம்பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Coca Cola Phone is Not Rebranded Version Smartphone It could be Special edition of Realme 10 Pro 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X