Home
Mobile

சியர்ஸ் சொல்லுங்க! Coca-Cola ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு! விலை என்ன?

கடந்த சில நாட்களாக Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போன் குறித்த பேச்சு ஸ்மார்ட்போன் சந்தையில் உலா வந்துக் கொண்டிருக்கிறது. Coca-Cola நிறுவனமே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்கிறதா எனவும் பலரும் சந்தேகத்தில் உள்ளனர். உண்மை என்ன என்று விரிவாக பார்க்கலாம்.

Realme 10 Pro Coca-Cola எடிஷன்

ரியல்மி நிறுவனம் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனாக Realme 10 Pro Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. Realme 10 Pro Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போனின் முன்பதிவு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

சியர்ஸ் சொல்லுங்க! Coca-Cola ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு! விலை?

பிப்ரவரி 10 அறிமுகம்

Realme 10 Pro Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்னதாகவே அதன் புகைப்படம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கோகோ கோலாவாக நிரம்பி இருக்கும் ஸ்மார்ட்போன்

Realme 10 Pro ஸ்மார்ட்போனின் பின்புற பேனலானது தனித்துவமான Coca-Cola பிராண்டிங் மேட் பிளாக் வண்ணத்தில் நிரப்பப்பட்டிருக்கிறது. இடது புறத்தில் சிவப்பு நிறத்துடன் Coca-Cola பெயரும் வலது புறத்தில் மேட் பிளாக் நிறத்தில் ரியல்மி என்ற நிறுவனத்தின் பெயருடன் மேல் வலது புறத்தில் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு கேமராவின் விளிம்புகளை சுற்றிலும் கொக்கக் கோலாவின் சிவப்பு நிற வண்ணத்தில் நிரப்பப்பட்டிருக்கிறது. மேட் பிளாக் மற்றும் கொக்கக் கோலா நிறத்துக்கு நடுவில் ஸ்மார்ட்போனின் மேற்புறத்தில் ஃப்ளாஷ் லைட் இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போன் பாக்ஸ் கோகோ கோலா தீம் உடன் இருக்கிறது.

Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போன் முன்பதிவு தொடக்கம்

Realme 10 Pro இன் சிறப்பு எடிஷன் வெளியிடுவதற்கு என ரியல்மி நிறுவனம் Coca-Cola உடன் கூட்டு சேர்ந்துள்ளது இதுவே முதன்முறை ஆகும். ரியல்மி முன்னதாகவே Thor: Love and Thunder போன்ற சில ஸ்பெஷல் எடிசன் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது. ரியல்மியின் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் முன்பதிவு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

ப்ரீ-புக்கிங் செய்வது எப்படி?

Realme 10 Pro Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அறிமுகத்தின் போது நிறுவனம் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பும் அதேநேரத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு உங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.

சியர்ஸ் சொல்லுங்க! Coca-Cola ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு! விலை?

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

Realme 10 Pro ஸ்மார்ட்போனின் கொக்கக் கோலா எடிஷன் குறித்த தகவல் முன்னதாகவே இந்தியாவில் கசிந்திருக்கிறது. Realme 10 Pro போன்றே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பக விருப்பங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பத்தில் வெளியாகலாம்.

ஸ்னாப்டிராகன் 695 SoC சிப்செட்

Realme 10 Pro Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 695 SoC உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம். இதை உறுதி செய்யும்படியாக தான் தற்போது இந்த ஸ்பெஷல் எடிஷன் போனின் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

5000mAh பேட்டரி ஆதரவு

Realme 10 Pro Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இதை சார்ஜ் செய்வதற்கு என 33W சார்ஜிங் ஆதரவு வழங்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் இல் சார்ஜிங் அடாப்டர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

சியர்ஸ் சொல்லுங்க! Coca-Cola ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிப்பு! விலை?

ரூ.20,000க்குள் இருக்கும் என தகவல்

Realme 10 Pro Coca-Cola எடிஷனின் முக்கிய அம்சங்களில் ஒன்று இதன் செல்பி கேமரா ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இதில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.20,000 விலை வரம்பில் வெளியாகலாம். சிறந்த வடிவமைப்பு கொண்ட ஸ்பெஷல் எடிஷன் போனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Coca-Cola Edition Smartphone Look Officially Revealed: Realme 10 Pro Special Edition Smartphone Specs and Price!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X