தட்டித்தூக்கு.. ஆளுக்கு 1 ஆர்டர் போடும் விலையில் Coca-Cola 5G போன் அறிமுகம்.. பிப்.14 முதல் விற்பனை!
சொன்னபடியே பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி (Realme) அதன் கோகோ-கோலா ஸ்பெஷல் எடிஷன் (Coca-Cola Special Edition) ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று (பிப்.10) அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்.14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!
ரியல்மி நிறுவனத்தின் இந்த கோகோ-கோலா ஸ்மார்ட்போன் எந்த மாடலின் ஸ்பெஷல் எடிஷன்? இதன் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எந்த இ-காமர்ஸ் வலைதளம் வழியாக வாங்க கிடைக்கும்? இதோ விரிவான விவரங்கள்:

இந்த Coca-Cola Phone எந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன்?
இது ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ரியல்மி 10 ப்ரோ 5ஜி (Realme 10 Pro 5G) ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனாகும்.
அதாவது இந்த கோகோ கோலா ஸ்மார்ட்போனின் வெளிப்புற வடிவமைப்பு (குறிப்பாக பேக் பேனலில் உள்ள லோகோ டிசைன்), ரீடிசைன் செய்யப்பட்ட ஆப் ஐகான்ஸ் (App icons), பப்ளி நோட்டிபிகேஷன்ஸ் (Bubbly notifications) மற்றும் கிளாசிக் கோகோ-கோலா ரிங்டோன் (Coca-Cola ringtone) போன்றவைகளை தவிர்த்து, மற்ற அம்சங்கள் எல்லாமே ரியல்மி 10 ப்ரோவுடன் ஒற்றுப்போகும்!
Realme 10 Pro Coca-Cola ஸ்பெஷல் எடிஷனின் விலை மற்றும் விற்பனை!
ரியல்மி 10 ப்ரோ கோகோ-கோலா ஸ்பெஷல் எடிஷன், சிங்கிள் ஸ்டோரேஜ் (8 ஜிபி ரேம் + 128 ஜிபி) ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.20,999 ஆகும்.
பிளாக் கலர் வேரியண்ட்டில், கோகோ கோலா லோகோவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி நிறுவனத்தின் சொந்த வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும்!
ரியல்மி 10 ப்ரோ கோகோ-கோலா ஸ்பெஷல் எடிஷன்: டிஸ்பிளே சைஸ் என்ன?
இது 6.72-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x 2,400 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் ஆகியவற்றை ஆதரிக்கும்!
இது அட்ரெனோ A619 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட கோகோ கோலா தீம் டிசனுடன் வரும்.
என்னென்ன கேமராக்கள்?
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 108-மெகாபிக்சல் சாம்சங் எச்எம்6 மெயின் கேமரா + 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் உள்ளது.
முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டிங்ஸில் 80ஸ் கோலா என்கிற ஃபில்டர் அணுக கிடைக்கும். இதன் கீழ் நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் 1980-களில் எடுக்கப்பட்டதை போல இருக்கும்!
கூடுதலாக, இதன் கேமரா ஷட்டரை திறக்கும் போது, ஷட்டர் சவுண்ட்டிற்கு பதிலாக கோகோ-கோலா பாட்டிலை திறக்கும் போது ஏற்படும் சத்தம் கேட்கும்!
என்ன பேட்டரி?
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி யுஎஃப்எஸ் 2.2 ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 1டிபி வரை ஸ்டோரேஜை நீட்டிக்கும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உடன் வருகிறது.
கடைசியாக இதன் பேட்டரியை பொறுத்தவரை, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது!


Click it and Unblock the Notifications








