Home
Mobile

இது வந்தா மட்டும் போதும்.. 5400mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. புது CMF போன்.. எந்த மாடல்?

சிஎம்எப் போன் 3 ப்ரோ (CMF Phone 3 Pro) ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. சிப்செட், பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் முந்தைய மாடலை தூக்கி சாப்பிட்டு இருக்கிறது. இந்த சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன், கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியது. டிசைன் மற்றும் பீச்சர்கள் பட்டையை கிளப்பியதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன.

இது வந்தா மட்டும் போதும்.. 5400mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. மாடல்?

இது முந்தைய மாடலில் இருந்து பேட்டரி, சிப்செட் உள்ளிட்டவற்றில் அப்கிரேட் கொடுத்து இருக்கிறது. 2026 ஆம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, முந்தைய மாடலை போலவே ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்கலாம். இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

சிஎம்எப் போன் 3 ப்ரோ அம்சங்கள் (CMF Phone 3 Pro Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், (2392 x 1080 பிக்சல்கள்) கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட்டை கொடுத்துள்ளது. சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட் கிடைத்தது.

அதேபோல சிஎம்எப் போன் 2 ப்ரோவில் 5000mAh பேட்டரி மட்டுமே கிடைத்தது. ஆனால், இதில் 5400mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. அதேபோல விலை விவரங்களும் தெரியவில்லை. இருப்பினும், முந்தைய மாடலின் பீச்சர்கள் மற்றும் விலையை வைத்து யூகிக்கலாம்.

சிஎம்எப் போன் 2 ப்ரோ அம்சங்கள் (CMF Phone 2 Pro Specifications): பாண்டா கிளாஸ் புரொடெக்சனுடன் 6.77 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளது.

3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதே டிஸ்பிளே பீச்சர்களை சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம். ஆக்டா கோர் மீடிாயாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Pro 4nm) சிப்செட்டை கொடுத்தது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் நத்திங் ஓஎஸ் 3.2 (Nothing OS 3.2) கிடைக்கிறது.

ஆகவே, சிஎம்எப் போன் 3 ப்ரோவில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 20X டிஜிட்டல் ஜூமிங், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இதே செட்டப் சிஎம்எப் போன் 3 ப்ரோவில் கிடைக்கலாம்.

இந்திய மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.20,000 பட்ஜெட்டில் சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். இது ஆரம்ப விலையாகவும் இருக்கும். பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் அதிக அப்கிரேட்கள் இருந்தால், விலை கூடுதலாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Phone 3 Pro With Snapdragon 7s Gen 4 5400mAh Battery Key Specifications Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X