Home
Mobile

அடுத்த CMF 5ஜி போன் ரெடி.. 5500mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்? என்ன விலை?

நத்திங் நிறுவனம் விரைவில் சிஎம்எப் சீரிஸ்-ல் அடுத்த போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் சிஎம்எப் போன் 3 ப்ரோ (CMF Phone 3 Pro) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிஎம்எப் போன் 3 ப்ரோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை வெளியாகி உள்ளது.

சிஎம்எப் போன் 3 ப்ரோ அம்சங்கள் (CMF Phone 3 Pro Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4 ) சிப்செட் கொண்டுள்ளது சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.

அடுத்த CMF 5ஜி போன்.. 5500mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்..

Nothing OS 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த சிஎம்எப் போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் போன்.

ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது சிஎம்எப் போன் 3 ப்ரோ போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor) வசதியும் சிஎம்எப் போன் 3 ப்ரோ போனில் உள்ளன. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5500mAh பேட்டரி சிஎம்எப் போன் 3 ப்ரோ போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங்இ வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் மெட்டல் ஃபிரேம் உடன் இந்த போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த போனின் எடை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா உடன் இந்த சிஎம்எப் போன் 3 ப்ரோ போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த சிஎம்எப் போன் 3 ப்ரோ போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் சிஎம்எப் போன் 3 ப்ரோ போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Phone 3 Pro Price and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X