சிஎம்எப் களமிறக்கும் புதிய 5ஜி போன்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
சிஎம்எப் போன் 3 ப்ரோ (CMF Phone 3 Pro) ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த போன் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
சிஎம்எப் போன் 3 ப்ரோ அம்சங்கள் (CMF Phone 3 Pro Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4 ) சிப்செட் கொண்டுள்ளது சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது.

அதேபோல் Nothing OS 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த சிஎம்எப் போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் போன்.
அதுவும் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது சிஎம்எப் போன் 3 ப்ரோ போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் சிஎம்எப் போன் 3 ப்ரோ போனில் உள்ளன. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
5500mAh பேட்டரி சிஎம்எப் போன் 3 ப்ரோ போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா உடன் இந்த சிஎம்எப் போன் 3 ப்ரோ போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர பல சிறப்பான கேமரா அம்சங்கள் இந்த சிஎம்எப் போன் 3 ப்ரோ போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சிஎம்எப் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் மெட்டல் ஃபிரேம் உடன் இந்த போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த போனின் எடை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, சிஎம்எப் போன் 3 ப்ரோ போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications