வாடா செல்லம்.. பட்ஜெட் விலையில் Nothing CMF-ன் அடுத்த Phone.. ட்ரிபிள் கேமரா, Mate Finish டிசைன்.. எந்த மாடல்?
இந்தியாவில் நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக நத்திங் போன் 3ஏ சீரிஸ் அறிமுகமாகி, தாறுமாறாக விற்பனையாகி கொண்டிருக்கும் வேளையில், நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் (CMF) பிராண்ட் ஆனது அதன் அடுத்த ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.
எந்த மாடல்? அது கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன சிஎம்எப் போன் 2 (CMF Phone 2) ஸ்மார்ட்போனாகும். நத்திங்கின் சப்-பிராண்ட் ஆன சிஎம்எப் இன்னும் சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போனின் இருப்பை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ரெண்டர்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

லீக் ஆன ரெண்டார்கள் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை காட்டுகின்றன. கேமரா சென்சார்கள் ஆனது ஃபிளாஷுடன் சேர்த்து முக்கோண வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளன. இது உண்மையாக இருந்தால், சிஎம்எப் போன் 2 மாடலில் - இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.
ஏனென்றால் தற்போதுள்ள மாடலில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சோனி சென்சார் மற்றும் ஒரு போர்ட்ரெய்ட் சென்சார் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் மட்டுமே உள்ளது. மேலும் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் மேட் ஃபினிஷ் கொண்ட சிஎம்எப் போன் 2 மாடலை போலவே இருக்கிறது.
லீக் ஆன ரெண்டர்களில் சிஎம்எப் போன் 2 பிளாக் ஆனது கலரில் உள்ளது.மேலும் பேக் பேனலில் உள்ள ஸ்க்ரூக்கள் ஆனது, சிஎம்எப் போன் 1 மாடலில் நாம் பார்த்ததை போலவே இன்டர்சேஞ்சபிள் கவர்கள் மற்றும் கஸ்டம் ஆக்சஸெரீஸ்களை ஆதரிக்கும் என்பதை குறிக்கின்றன.
சிஎம்எப் போன் 2-வில் உள்ள ஸ்க்ரூக்கள் ஆனது சிஎம்எப் போன் 1 மாடலில் உள்ள அதே நிலையில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆக இரண்டு போன்களுக்கான ஆக்சஸெரீஸ்களும் பொதுவானதாக இருக்க வாய்ப்புள்ளது. விலையை பொறுத்தவரை சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 2024 இல் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் அறிமுகமானது.
சிம்எம்எப் போன் 1 உள்ள நிறைகள் மற்றும் குறைகள்: 5 முக்கியமான காரணங்களை முன்வைத்து, இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். முதலாவதாக இது கஸ்டமைபிலிட்டி, பழுதுபார்த்தல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாக கொண்ட மிகவும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இரண்டாவதாக இது எச்டிஆர் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிரகாசமான ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
மூன்றாவதாக இது பட்ஜெட் விலையில் வந்தாலும் இது சிறந்த பேட்டரி லைஃப்பை (33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி) வழங்குகிறது. நான்காவதாக இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் மிகவும் நியாயமான சிப்செட்டை (ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 5ஜி) பேக் செய்கிறது. ஐந்தாவதாக இது உறுதியான கேமரா இமேஜ் குவாலிட்டியை வழங்குகிறது; இது இஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்ப்பதற்கான சில நியாயமான காரணங்களும் எங்களிடம் உள்ளன. முன்னரே குறிப்பிட்டபடி இதன் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இருக்காது. மேலும் இது மிகவும் சாதாரணமான ஐபி52 ரேட்டிங்கையே கொண்டுள்ளது. கூடவே இதில் மிகவும் சுமாரான சிங்கிள் லவுட் ஸ்பீக்கர் மட்டுமே உள்ளது. கடைசியாக இதன் கேமராவில் இஐஎஸ் ஆதரவு இருந்தாலும் ஓஐஎஸ் ஆதரவு இல்லை.


Click it and Unblock the Notifications








