சிங்கிள் கேமரா மட்டுமல்ல.. புதிய டிசைனில் CMF Phone 2.. என்னென்ன மாற்றம்? என்ன விலைக்கு வரும்?
கடந்த ஆண்டு வெளியான சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன சிஎம்எப் போன் 2 (CMF Phone 2) ஸ்மார்ட்போன் ஆனது சில வடிவமைப்பு மாற்றங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பது போல் தெரிகிறது. நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆன சிஎம்எப் மிகவும் சமீபத்தில் தான் அதன் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போனின் வருகையை டீஸ் செய்ய தொடங்கியது.
இதற்கிடையில் சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போனின் பேக் பேனலை (Back Panel) வெளிப்படுத்தும் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் டீஸரின் படி, சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது புதிய மேட் பினிஷ் (Matte finish) உடன் வரக்கூடும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

எக்ஸ் தளம் வழியாக ஒரு சுருக்கமான வீடியோவாக பகிரப்பட்ட டீஸரில், சிஎம்எப் போன் 2 ஆனது பிளாஸ்டிக் எட்ஜ்கள் (Plastic Edges) மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட பேக் பேனல் (Redesigned rear pane) மற்றும் ஒரு ஸ்க்ரு (Screw) ஆகியவற்றை காட்டுகிறது. டீஸர் வீடியோ வழியாக மேட் பினிஷ உடன் கூடிய பளபளப்பான பேக் பேனலை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.
ஆனாலும் பேக் பேனல் எந்த பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிற விவரங்கள் வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலும் இது பிளாஸ்டிக் அல்லது அலுமினியத்தால் (Aluminium) செய்யப்படலாம். தற்போதைய ஜெனரேஷன் மாடலில் (அதாவது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில்) பாலிகார்பனேட் பேக் பேனல் (Polycarbonate rear panel) உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கடைசியாக வெளியான டீஸர் வழியாக சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போனின் கீழ் இடது பக்கத்தில் சிஎம்எப் பை நத்திங் (CMF by Nothing) லோகோவையும் காண முடிகிறது. இது வெவ்வேறு கோணங்களில் வைத்திருக்கும் போது ஒளி வீசும் லோகோவாக அல்லது இருண்ட லோகோவாக தோன்றுகிறது.
சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (CMF Phone 2 Expected Specifications)? இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? முன்னதாக வெளியான டீசர் வழியாக சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது சிஎம்எப் நிறுவனத்தின் சிக்னேச்சர் ஆரஞ்சு கலர் பேக் பேனலையும் (Orange Color Back Panel), சிங்கிள் ரியர் கேமரா செட்டப்பையும் (Single Rear Camera Setup) பெற்று இருப்பதை காண முடிந்தது.
அதாவது இது சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த டூயல் ரியர் கேமரா செட்டப்பில் (Dual Rear Camera Setup) இருந்து விலகி சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் ரியர் கேமரா செட்டப்பிற்குள் (Single Rear Camera Setup) நுழைகிறது. மேலும் கேமரா சென்சார் ஆனது ரியர் பேனலில் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது; கேமராவிற்கான ஃபிளாஷ் சென்சாருக்கு கீழே வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கும் முன்னதாக வெளியான லீக் ரெண்டர்களில் சிஎம்எப் போன் 2 பிளாக் ஆனது கலரில் உள்ளது. மேலும் பேக் பேனலில் உள்ள ஸ்க்ரூக்கள் ஆனது, சிஎம்எப் போன் 1 மாடலில் நாம் பார்த்ததை போலவே இன்டர்சேஞ்சபிள் கவர்கள் மற்றும் கஸ்டம் ஆக்சஸெரீஸ்களை ஆதரிக்கும் என்பதை குறிக்கின்றன.
சிஎம்எப் போன் 2-வில் உள்ள ஸ்க்ரூக்கள் ஆனது சிஎம்எப் போன் 1 மாடலில் உள்ள அதே நிலையில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆக இரண்டு போன்களுக்கான ஆக்சஸெரீஸ்களும் பொதுவானதாக இருக்க வாய்ப்புள்ளது. விலையை பொறுத்தவரை சிஎம்எப் போன் 2 ஸ்மார்ட்போன் (CMF Phone 2 Expected Price in India) ஆனது ரூ.19,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications